மகத்தான மனிதநேயம்! உடல் உறுப்புகள் கொடை: 6 பேர் மறுவாழ்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 27, 2023

மகத்தான மனிதநேயம்! உடல் உறுப்புகள் கொடை: 6 பேர் மறுவாழ்வு

மதுரை,ஜூலை 27- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (வயது 24). இவர் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 22ஆம் தேதியன்று இரவு பாரப்பட்டியில் மணிகண்ட பிரபு சாலை விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிறிவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து மேல் சிகிச்சைக் காக 23ஆம் தேதியன்று மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் மணிகண்ட பிரபு மூளைச் சாவு அடைந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து மணிகண்ட பிரபு உடல் உறுப்புகளை உறவினர்கள் கொடையாக கொடுக்க முன்வந் தனர். இந்த நிலையில், மணிகண்ட பிரபுவின் உடல் உறுப்புகள் 26.7.2023 அன்று பிரித்து எடுக்கப் பட்டன. சிறுநீரகம் மற்றும் கல் லீரல் ஆகியவை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கு பொருத்தப் பட்டது. மற்றொரு சிறுநீரகம் திருச்சி கே.எம்.சி.மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் நோயா ளிக்கு பொருத்த கொண்டு செல் லப்பட்டது.

இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக ளுக்கு பொருத்துவதற்காக விமா னம் மூலம் கொண்டு செல்லப் பட்டது.

இதயம் மற்றும் நுரை யீரலை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் இருந்து 15 நிமிடத்தில் மதுரை விமான நிலையம் சென்ற டைந்தது. ஆம்புலன்ஸ் சிக்னலில் நிற்காமல் விரைவாக செல்லும் வகையில் போக்குவரத்து காவல் துறையினர் ஏற்பாடு செய்தனர். இதே போல மணிகண்ட பிரபுவின் கண் மதுரை அரவிந்த் கண் மருத்துவம னைக்கு கொண்டு செல்லப்பட்டது. மணிகண்ட பிரபுவின் உடல் உறுப்பு  கொடை 6 பேர் மறுவாழ்வு பெற்றுள் ளனர். உடல் உறுப்புகளை கொடை யாக கொடுத்து நோயாளிகளுக்கு மறு வாழ்வு கொடுத் ததற்காக மணிகண்ட பிரபுவின் குடும்பத்தினருக்கு மருத்து வர்கள் நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment