சென்னை, ஜூலை 30 - விண்ணில் செலுத்தப்பட்ட 23 நிமிடங்களுக்குள் ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட்டில் இருந்த 7 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு றிஷிலிக்ஷி-சி56 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டானது சிங்கப்பூர் நாட்டின் 360 கிலோ எடை கொண்ட ஞிஷி-ஷிகிஸி புவிநோக்கு செயற்கைக்கோள் உள்பட வெலாக்ஸ்-ஏஎம், ஆர்கேட், ஸ்கூப்மிமி, கலாசியா - 2 மற்றும் ஓஆர்பி-12 ஸ்ட்ரைடர் உள்ளிட்ட 7 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது. வெற்றிகரமாக 7 செயற்கைகோள்களும் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தம்.
மேலும் அரியலூர் விஞ்ஞானியின் 3 நானோ செயற்கை கோள்களைச் சுமந்து சென்றது. இதில், இடம் பெற்றுள்ள முதன்மை செயற்கைக்கோளான சிங்கப்பூர் நாட்டின் ஞிஷி ஷிகிஸி, சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய வகையிலும் இரவு, பகல் என அனைத்து பருவநிலையிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும். இந்த செயற்கைகோள் பூமியிலிருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுபாதையில் நிலைநிறுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி விண்ணில் செலுத்திய 23 நிமிடங்களில் அனைத்து செயற்கை கோள்களும் அதன் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment