குரூப்-4 பணிக்கான கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 14, 2023

குரூப்-4 பணிக்கான கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை, ஜூலை 14 - தமிழ்நாட்டின் வரலாற்றில் அதிகபட்சமாக 18.36 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 பணிக்காக சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலா ளர் உமா மகேஸ்வரி (12.7.2023) அன்று வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 பணிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவ லர் உள்பட பல்வேறு பதவிக்கு, கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப் பெண் மற்றும் தர வரிசை விவரங் கள் கடந்த மார்ச் 24ஆம் தேதி தேர்வா ணைய இணையதளத்தில் வெளியிடப் பட்டன. குரூப் 4 பணிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், கள உதவியாளர், வரித் தண்டலர் (கிரேடு 1), வரித் தண்டலர், பண் டகக் காப்பாளர் போன்ற பதவி களுக்கான மூலச்சான்றிதழ்கள் சரி பார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை (ஞாயிறு மற்றும் மொகரம் நீங்கலாக) சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பி எஸ்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விண்ணப்பதா ரர்கள் இந்த மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட் டாது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. 

டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் அதிகப்பட்சமாக 18.36 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதி இருந்தனர். திருவிழா போல இந்த தேர்வு தேர்வு நடைபெற்றது. தேர்வு நடை பெற்றபோது காலி பணியிடங்கள் எண்ணிக்கை 7,301 இடமாக தான் இருந்தது. தற்போது இந்த பணியிடங்கள் எண்ணிக்கை 11 ஆயிரம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment