இந்தியாவில் 49 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

இந்தியாவில் 49 பேருக்கு கரோனா பாதிப்பு

புதுடில்லி, ஜூலை 20 இந்தியாவில் 18.7.2023 அன்று 34 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று (19.7.2023) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு 49 ஆக உயர்ந்தது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண் ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 95 ஆயிரத்து 4 ஆக அதிகரித்தது. 24 மணி நேரத்தில் கரோனாவில் இருந்து 38 பேர் குணம் அடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 61 ஆயிரத்து 625 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 11 அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 1,464 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். தொடர்ந்து 3-ஆவது நாளாக நேற்றும் உயிரிழப்பு இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 915 ஆக நீடிக்கிறது.


No comments:

Post a Comment