44ஆவது பன்னாட்டு செஸ் போட்டியை சிறப்பாக நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறந்த மனிதருக்கான விருது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 29, 2023

44ஆவது பன்னாட்டு செஸ் போட்டியை சிறப்பாக நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறந்த மனிதருக்கான விருது!

ஆசிய செஸ் கூட்டமைப்பின் நிர்வாகிகள் வழங்கினர்

சென்னை, ஜூலை 29- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அபு தாபியில் ஆசிய செஸ் கூட்ட மைப்பின் சார் பில் வழங்கப்பட்ட 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதருக்கான விருதினை செஸ் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களிடம் நேரில் வழங்கினார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (28.07.2023) முகாம் அலுவலகத்தில், ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத் தலை வர் பரத் சிங் சௌகான் தலைமையில் செஸ் கூட்டமைப் பினர் நேரில் சந்தித்து, 44ஆவது பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத் திய முதலமைச்சர் அவர்களுக்கு ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார் பில் வழங்கப் பட்ட 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த மனித ருக்கான விருதினை  (Man of the Year Award) வழங்கினார்கள்.

44ஆவது பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட், இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில், பல்லவர் காலச் சிற்பக்கலையினை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமான மாமல் லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை மிகச் சிறப்புடன் நடைபெற்றது. இந்த போட்டியில் பன்னாட்டு அளவில் 185க்கும் மேற் பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் அதிக மான சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 44ஆவது செஸ் ஒலிம்பி யாட் நடத்துவதற்கு தமிழ் நாடு அரசின் சார்பில் 114 கோடி ரூபாய் நிதி நிர்வாக ஒதுக்கீடு செய்து, போட்டி நடத்த அனுமதி கிடைத்த 4 மாத காலத்திற்குள் 44ஆவது செஸ் போட்டிகளையும், அதன் தொடக்க மற்றும் நிறைவு விழா வினை ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையாக உலகமே வியக்கும் வண்ணம் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார்.

இந்த போட்டியையொட்டி தமிழ்நாடு முழுவ தும் அனைத்து மாவட்டங்களுக்கும் செஸ் ஒலிம் பியாட் தீபம் கொண்டு செல்லப் பட்டு பொதுமக்களுக்கும், மாண வர்களுக்கும் விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டது.

ஏற்கெனவே உலக அளவில் பல்வேறு கிராண்ட் மாஸ்டர்களை கொண்டுள்ள தமிழ் நாட்டில், மேலும் பல கிராண்ட் மாஸ்டர் களை உருவாக்கும் வகையில் தமிழ் நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் சதுரங்க விளையாட்டு போட் டிகள் நடத்தப்பட்டு, மாநில அள வில் சிறந்த விளையாட்டு வீரர்கள் கண்டறியப்பட்டு, அவர் கள் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர் களுடன் விளையாடவும், செஸ் ஒலிம்பியாட் விளை யாட்டு போட் டிகளை பார்வையிடவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்தப் போட்டியை சிறப்பாக நடத்திட முதல மைச்சர் அவர்கள் தலைமையில், அமைச்சர் பெரு மக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செய லாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து போட்டிகளில் பங்கேற்க வருகை தந்த பன்னாட்டு சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கு உயர்தர நட்சத்திர விடுதிகள், தங் கும் இடத்திலிருந்து போட்டி நடைபெற்ற இடத் திற்கு சென்று வர சிறப்பு போக்குவரத்து வசதிகள், உணவு மற்றும் பாது காப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப் பட்டது.

முதலமைச்சருக்கு சிறந்த மனிதருக்கான விருது! 

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப் பாக நடத்தி, இந்தியாவில் மற்ற மாநிலங்களி லும்சதுரங்கப்போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட காரணமாக விளங்கிய முதலமைச்சர் அவர்க ளுக்கு அபுதாபியில் ஆசிய செஸ் கூட்ட மைப்பின் சார்பில் 1.03.2023 அன்று நடை பெற்ற Asian Chess Excellence Awards  விருது வழங்கும் நிகழ்ச்சியில், 2023ஆம் ஆண்டிற் கான சிறந்த மனிதருக்கான விருது (Man of the Year Award) வழங் கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களுக்கு வழங்கப்பட்ட இந்த விரு தினை ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் பரத் சிங் சவுகான் அன்றைய தினம் பெற்றுக் கொண்டார். 

44ஆவது பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடை பெற்று நேற்றுடன் (28.07.2023) ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, ஆசிய மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பினர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் சது ரங்க போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு முன்னேடியாக 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத் தியதற்காக தமிழ்நாடு முதலமைச் சர் அவர்களுக்கு ஆசிய செஸ் கூட் டமைப்பின் சார் பில் வழங்கப்பட்ட 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதருக்கான விருதினை (Man of the Year Award)  வழங்கினார்கள்.

இந்நிகழ்வின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை அமைச் சர் உதய நிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற் றும் விளையாட்டு மேம்பாட் டுத்துறை கூடுதல் தலைமைச் செய லாளர் அதுல்ய மிஸ்ரா, அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், துணைத் தலைவர் படுவஷ் பட்டேல், செயலாளர் விபினேஷ் பரத்வாஜ், பொருளாளர் நரேஷ் வர்மா ஆகி யோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment