சென்னை,ஜூலை6- தமிழ் நாட்டில் 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்து, அதற்கு ரூ.404 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமூகநலத் துறைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்ட அரசாணை யில் கூறியிருப்பதாவது:
கடந்த ஜனவரி 13ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், ‘‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் ஏற்பட் டுள்ள பயனைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்’’ என்று அறிவித்தார்
இதையடுத்து, 2023-24ஆம் நிதி யாண்டு பட்ஜெட்டில், ‘‘காலை உணவுத் திட்டம் வரும் கல்வி யாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30,122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர் கள் பயனடையும் வகையில் விரிவு படுத்தப்படும். இதற்காக ரூ.500 கோடி நிதி ஓதுக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, மாநகராட்சி, நக ராட்சி, கிராம ஊராட்சிகள் மற் றும் மலைப் பகுதிகளில் செயல் படும் 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த ரூ.33.56 கோடி ஒதுக்கி, கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி உத் தரவிடப்பட்டது.
அடுத்தகட்டமாக, 433 மாநக ராட்சி, நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 56,160 மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டது.
இந்நிலையில், மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப் புற பகுதிகள், ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 18.54 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவு படுத்த, ரூ.539.88 கோடி நிதி ஒதுக் குமாறு சமூகநலத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.
இதை கவனமாகப் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, காலை உணவுத் திட்டத்தை 2023-24ஆம் நிதியாண் டுக்கு விரிவுபடுத்துவதற்கான உத் தரவுகளை வெளியிடுகிறது. இதன் படி, 31,008 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 15,75,900 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக் கம் செய்யப்படுகிறது.
இதற்காக, 2023-24 நிதியாண் டில் ரூ.404.41 கோடி ஒதுக்கப்படு கிறது. ஏற்கெனவே நிர்ணயிக்கப் பட்டுள்ள படி, ஏதேனும் ஒரு சிற்றுண்டியை பள்ளியின் அனைத்து வேலை நாட்களிலும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் காலை 8 மணி முதல் 8.50 மணிக்குள் சிற்றுண்டி வழங்க வேண்டும். கலப்படமின்றி உணவு சமைக்கப்பட வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. உணவு வழங்கும் முன், பள்ளி மேலாண் மைக் குழுவினர் அதை உண்டு பார்த்து, பின்னர் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அரசாணை யில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
முதலமைச்சர் தொடங்கி வைப்பார்
ஏற்கெனவே 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட இந்த திட் டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நேரடியாகத் தொடங்கி வைத்தார்.
அதேபோல, விரிவாக்கத் திட் டத்தையும் வரும் ஜூலை 2ஆவது வாரத்தில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளி யாகி உள்ளன.
No comments:
Post a Comment