மதுரை, ஜூலை 3 - நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் என செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மதுரை வடக்கு, மாநகர், தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் 2.7.2023 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் வணிகவரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான மூர்த்தி கலந்து கொண்டு பேசி னார். அப்போது அவர் பேசிய தாவது:-
கிராமம், நகர்ப்புற மாணவர்கள் புத்தகங்களை தேடி செல்லும் நிலை ஏற்பட்டு வந்தது. இனி அந்த நிலை இருக்காது. மதுரையில் 3 லட்சத்திற்கு மேல் புத்தகங்களைக் கொண்டு கலைஞர் நூலகம் பிர மாண்டமாக கட்டப்பட் டுள்ளது. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., குரூப்-1, குரூப்-2 தேர்வு, எழுதக்கூடிய மாணவ_-மாணவிகள் படிப்பதற் கான நூல்கள் நூலகத்தில் அமைந் துள்ளது. சென்னையில் அறிஞர் அண்ணா பெயரில் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகத்தை அமைத்தார். அதேபோல மதுரையில் கலைஞர் பெயரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பிரமாண்ட மான நூலகத்தை அமைத்துள்ளார்.
வருகின்ற 15ஆம் தேதி கலைஞர் நூலகத்தை தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நூலக திறப்பு விழா வுக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கக்கூடிய வரவேற்பு நிகழ்வானது பெரும் மாநாடுபோல அமையும். நாடாளு மன்ற தேர்தலில் தி.மு.க. 40 இடங் களிலும் வெற்றி பெறும். பிரதமர் யார்? என்று கைநீட்டக் கூடியவ ராக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார். மதுரை, விருதுநகர், தேனி ஆகிய 3 தொகுதியிலும் தி.மு.க. போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது உரிமை. தலைவர் கவனத் திற்கு கொண்டு செல்வோம். அதே சமயம் தலைவர் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment