ஆண்டவனை நம்பினால் இப்படித்தான் சதுரகிரி மலையில் தீ; 3 ஆயிரம் பக்தர்கள் தரை இறங்க முடியாமல் தவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 18, 2023

ஆண்டவனை நம்பினால் இப்படித்தான் சதுரகிரி மலையில் தீ; 3 ஆயிரம் பக்தர்கள் தரை இறங்க முடியாமல் தவிப்பு

விருதுநகர், ஜூலை 18- விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்க சுவாமி கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவிலில் நேற்று (17.7.2023) ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்காக பக்தர்கள் வழிபாடு செய்ய தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் மலைப்பகுதி வழியாக கோவிலுக்கு நடந்து சென்றனர். இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி அளவில், மலைப்பாதையை ஒட்டிய தவசிப்பாறை 5-வது பீட் வனப்பகுதியில் இரட்டை லிங்கம் மற்றும் பச்சரிசிப்பாறை இடையே உள்ள நாவலூற்று பகுதியில் திடீரென காட்டுத் தீப்பற்றியது. கடந்த 2 மாதங்களாக இப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் காட்டாறுகள், ஓடைகள் வறண்டு கிடந்தன. செடி, கொடிகள் காய்ந்து இருந்தன. எனவே காட்டுத்தீயானது வேகமாக பரவியது. இதனால் நேற்று அமாவாசை தரிசனத்திற்காக சென்ற பக்தர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்கி வர தடை விதிக்கப்பட்டு மலையில் உள்ள கோவில் வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்தனர்.

சாப்டூர் வனச்சரகர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் வனப்பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


No comments:

Post a Comment