சென்னை ஜூலை 21 - சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை, 4-ஆவது முறையாக வெற்றிகரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு: சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இதுவரை 3 முறை மாற்றப்பட்டது. தொடர்ந்து 4ஆவது முறையாக நேற்று (20.7.2023) மதியம் 2 முதல் 3 மணி அளவில் விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரமானது உயர்த்தப்பட்டது. குறைந்தபட்சம் 233 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 71,351 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப் பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. பன்னாட்டு நிலவு தினத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலவுக்கான பயணத்தில் சற்று முன்நோக்கி நகர்ந்துள்ளோம். அடுத்தகட்டமாக சந்திரயானின் பயணப்பாதை ஜூலை 25ஆ-ம் தேதி மாற்றி அமைக்கப்படும். அதன்பின் ஆகஸ்ட் 1இல் புவி வட்டப் பாதையில் இருந்து விலகி விண்கலம் நிலவை நோக்கி பயணிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment