திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், காரைக்குடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தி.புரூனோ என்னாரெசு, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோரின் தாத்தா காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் என்.ஆர். சாமி. அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காரைக்குடி பெரியார் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்வில் மாவட்ட கழக காப்பாளர் சாமி.திராவிடமணி, மேனாள் மண்டல செயலாளர் சாமி.சமதர்மம், கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி வி.பாலு, ச.ஆனந்தி, தி.செயலெட்சுமி, தி.தமிழ்ச்செல்வி, பு.ரம்யமலர், சொ.ஜான்சி ராணி, ஜா.எ.டார்வின் தமிழ், ர.பு. கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment