நியுசவுத்வேல்ஸ் ஜூலை 21 ரஷ்யா வின் 35 நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு பொருளாதாரத் தடை விதிக் குள்ளது. உக்ரைன் உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டணியான நேட் டோவில் இணைவதற்காக முயற்சி செய்து வருகிறது. தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு இதனால் அச்சுறுத்தல் ஏற்படும் என கருதி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் போரில் களமிறங்கின.
அந்நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் விநியோகம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருவதால் உக்ரைன் ரஷ்யாவின் தாக்குதலைச் சமாளித்து வருகிறது. கடந்த 17 மாதங்களைத் தாண்டி போர் தொடர்ந்து நடை பெறுவதால் இது உலக பொரு ளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்விரு நாடுகளும் கோதுமை, பார்லி, சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் முக்கிய ஏற்றுமதி மய்யங்களாக இருப்பதால் அவற் றின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது.
கருங்கடல் ஒப்பந்தம் மூலம் அந்த தானியங்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த 18-ஆம் தேதி இந்த ஒப்பந்தம் காலாவதியானதாக ரஷ்யா அறிவித்தது.
அய்.நா. மற்றும் உலக நாடுகள் பலவும் இதற்குக் கண்டனம் தெரிவித்தன. ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள்மீது பொருளாதாரத் தடை களை விதித்துள்ள நாடுகளின் பட்டி யலில் தற்போது ஆஸ்தி ரேலியாவும் இணைந்துள்ளது. ரஷ்யாவில் உள்ள 35 நிறுவனங்கள், மேனாள் துணைப் பிரதமர்கள் ஆண்ட்ரே பெலோசோவ், டிமிட்ரி செர்னிஷென்கோ மற்றும் பெலா ரசில் உள்ள ராணுவ உயர் அதி காரிகள் என 10 தனிநபர்களுக்குப் பொருளாதாரத் தடை விதிக் கப்பட்டு இருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment