34 ஒன்றிய அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கக் கோரி "டில்லிக்கு கடிதம் எழுதுவீர்களா கிண்டி...?" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 1, 2023

34 ஒன்றிய அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கக் கோரி "டில்லிக்கு கடிதம் எழுதுவீர்களா கிண்டி...?"

ஆளுநருக்கு எதிராக சென்னையில் சுவரொட்டிகள்..!!

சென்னை, ஜூலை 1- செந்தில் பாலாஜியை பதவி நீக்கியதை கண் டித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சென்னையில் சுவரொட் டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

சென்னை நகரின் பல இடங் களில் ஆளுநருக்கு எதிராக சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. "கிண் டிக்கு ஒரு கேள்வி" என தலைப்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டி களில் கொலை, கொள்ளை, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் உள் ளிட்ட கடும் குற்ற வழக்குகளை சந்தித்து வரும் ஒன்றிய பாஜக அரசின் உள்ள 77 அமைச்சர்களில் 34 அமைச்சர்கள் மீது வழக்கு இருப் பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒன்றிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளி தரன் மீது 7 வழக்குகள், சிறுபான் மையினர் அமைச்சர் ஜான் பார்லா மீது 9 வழக்குகள், உள்துறை இணை அமைச்சர் சிறீநிசித் பிர மானிக் மீது 11 வழக்குகள் இருப்ப தாக அந்த சுவரொட்டியில் தெரி விக்கப்பட்டுள்ளது. 

இந்த 34 ஒன்றிய அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க கோரி "டில்லிக்கு கடிதம் எழுதுவீர்களா கிண்டி?" என ஆளுநருக்கு கேள்வி எழுப்பி சுவரொட்டிகள் ஒட்டப் பட்டுள்ளது. அம லாக்கத்துறையினரால் கைதுச்செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந் தார். இதற்கு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து செந்தில் பாலா ஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிய உத்தரவை நிறுத்தி வைப்ப தாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு ஆளு நர் ஆர்.என்.ரவி கடி தம் எழுதியுள்ளார். 

இது தொடர்பாக ஒன்றிய அர சின் தலைமை வழக்குரைஞரிடம் கருத்து கேட்க ஆளுநர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், செந்தில் பாலா ஜியை பதவி நீக்கியதை கண்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சென் னையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற் பட்டிருக்கிறது. 

No comments:

Post a Comment