இந்தியாவில் பாதாள சாக்கடையில் வேலை செய்தவர்கள் 339 பேர் கடந்த ஆண்டுகளில் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 27, 2023

இந்தியாவில் பாதாள சாக்கடையில் வேலை செய்தவர்கள் 339 பேர் கடந்த ஆண்டுகளில் உயிரிழப்பு

புதுடில்லி, ஜூலை 27 நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணியில் 339 தொழிலாளர்கள் உயிரிழந் ததாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு ஒன்றிய சமூகநீதித் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே பதில் அளித்தார். அவர் கூறியதாவது: நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணியில் 339 துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்துள்ளனர். ஆண்டு வாரியாக கூறினால், 2022-இல் 66 பேர், 2021-இல் 58 பேர், 2020-ல் 22 பேர், 2019-இல் 117 பேர், 2018-இல் 67 பேர் என உயிரிழப்பு பதிவாகி யுள்ளது.

பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை ஆட்கள் மூலம் சுத்தம் செய்ய தடை விதித்தும் இப் பணியில் ஈடுபட்டு வந்தவர்களின் மறுவாழ்வுக்காகவும் 2013-இல் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது இந்தப் பணிகளில் ஆட்களை ஈடுபடுத்துவது குறித்து எந்த தகவலும் இல்லை.

மனிதக் கழிவுகளை கைகளால் சுத்தம் செய்வதற்கும், எடுத்துச் செல்வதற்கும், அகற்றுவதற்கும் அல்லது வேறுவிதமாக கையாளுவதற்கும் எந்தவொரு நபரையும் பயன்படுத்துவதை இந்த சட்டம் தடை செய்கிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment