புதுடில்லி, ஜூலை25 - ‘ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன; எப்போதோ நிரப்ப வேண்டிய பணிகளுக்கு இப்போது பிரதமர் மோடி நியமன ஆணை வழங்கிக் கொண்டிருக்கிறார்’ என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்ப தாவது:
“ஒன்றிய அரசுத் துறைகளில் மட்டும் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. எப்போதோ நிரப்பப்பட வேண்டிய பணியிடங் கள், இப்போது நிரப்பப்படுகின்றன. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு தவணை முறை யில் நியமன ஆணை களை வழங்கி, ‘ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும்’ என்ற பாஜகவின் வாக்குறுதியை நிறை வேற்றி வருவது போல் காட்டிக் கொள்கிறார் பிரதமர் மோடி.
கடந்த 9 ஆண்டுகளாக மோடி அரசின் தவறான கொள்கைகளால், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவ னங்கள் மீது சுமை அதிகரித் துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 20 ஆயி ரம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங் கள் மூடப்பட்டுள்ளன. லட்சக் கணக்கான இளைஞர்கள் வேலை யிழந்துள்ளனர். அவர்களின் எதிர் காலத்தை இருள் சூழ்ந்துள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங் குடியினர், இதர பிற்படுத்தப்பட் டோர் மற்றும் பொருளாதார ரீதி யில் பின்தங்கிய பிரிவினர் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையை, நாட் டின் இளைஞர்கள் இனியும் சகித்துக் கொண்டிருக்க மாட் டார்கள். இந்த இளைஞர் விரோத அரசு, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்படும். பாரதம் ஒருங்கிணை யும்; ‘இந்தியா’ வெல்லும்” என்று மல்லிகார்ஜூன கார்கே குறிப்பிட் டுள்ளார்.
No comments:
Post a Comment