அறிவியல் பாய்ச்சல்! நிலவில் தளம் பதிக்க சந்திராயன் 3 விண்கலம் தயார் நிலை: தமிழ்நாடு விஞ்ஞானிகள் மூவர் வழிகாட்டல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 12, 2023

அறிவியல் பாய்ச்சல்! நிலவில் தளம் பதிக்க சந்திராயன் 3 விண்கலம் தயார் நிலை: தமிழ்நாடு விஞ்ஞானிகள் மூவர் வழிகாட்டல்

சென்னை, ஜூலை 12 - சிறீ ஹரிகோட்டாவில் இருந்து ‘சந்திரயான்-3’ விண்கலம் 14-ஆம் தேதி விண்ணில் பாய்ந்து நில வில் தடம் பதிக்க இருப்பதாக இஸ்ரோ அறிவியல் ஆய்வாளர்கள் கூறினர்.

விண்வெளித் துறை யில் வியக்கத்தகு சாதனை களை செய்து வரும் இந் திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) லட்சியக் கனவு திட்டம் நிலவை ஆய்வு செய்வதா கும். இதற்காக பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்ய அதிக தீவிரம் காட்டுகிறது. ஏற்கெ னவே சந்திரயான் 1, 2 விண்கலங்கள் விண்ணில் ஏவப்பட்ட நிலையில், தற்போது ஆந்திராவின் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்தில் இருந்து 'சந்தி ரயான்-3' விண்கலம் வரு கிற 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப் படுகிறது. முழுவதும் உள் நாட்டிலேயே தயாரிக்கப் பட்டுள்ள 'எல்.வி.எம்.3 எம் 4' ராக்கெட் 43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்டது. திட, திரவ, கிரையோ ஜெனிக் என 3 நிலைகளில் எரிபொருள் உதவியால் விண்ணில் பாயும் ராக் கெட் 4 டன் எடையை புவிநிலை சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்லும். சந்திரயான்-3 விண்கலம், ராக்கெட்டில் இணைக் கப்பட்டு, எரிபொருள் நிரப்பும் பணியும் நிறை வடைந்து உள்ளது. தற் போது விண்ணில் ஏவு தற்கு ராக்கெட் தயார் நிலையில் இருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரோ விஞஞானிகள் கூறியதா வது:- சந்திரயான்-3 திட் டத்தை ரூ.615 கோடியில் செயல்படுத்த 2020ஆ-ம் ஆண்டு இஸ்ரோ முடிவு செய்தது. இந்தியாவின் அதிக எடையை தாங்கி செல்லும் 'ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3' ராக்கெட் தற் போது எல்.வி.எம்.3 ராக் கெட் என்று அழைக்கப் படுகிறது. இந்த ராக் கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் பொருத்தப் பட்டு விண்ணில் ஏவப் படுகிறது. ராக்கெட் ஏவு தலின்போது எந்த பிரச்சி னையும் ஏற்படாத வகை யில், கட்டமைப்பு, கணி னிகள், மென்பொருள் மற்றும் சென்சார்களில் திருத்தங்கள் செய்யப் பட்டு உள்ளன. அதிக எரிபொருளும் சேர்க்கப் பட்டு உள்ளது. 

நிலவில் தரையிறங் கும் லேண்டரின் கால்கள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. லேண்டர் தொடர்ந்து இயங்க அதிக ஆற்றல் உற்பத்திக் காக பெரிய சோலார் பேனல்கள் பொருத்தப் பட்டு உள்ளன. மற்றொரு கூடுதல் சென்சாரும் இப்போது சேர்க்கப்பட்டு உள்ளது. கடந்த முறை கனநொடியில் வெற்றி கைத்தவறிய சூழலில், இம்முறை நிலவில் சந் திரயான் 3 இமாலய சாத னையை தனதாக்கும் என நம்பப்படுகிறது. அத்து டன், இந்த சந்திரயான் 3 திட்டம் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகம் முழு வதும் உள்ள விண்வெளி ஆய்விற்கு மிக முக்கிய மான விஷயமாக பார்க் கப்படுகிறது. இதற்கான இறுதிகட்டப் பணியான 'கவுண்ட் டவுன்' வருகிற 13-ஆம் தேதி தொடங்கு கிறது' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகின்ற னர். இந்திய விண்வெளித் துறையின் செயலாளரும், இஸ்ரோ தலைவருமான எஸ்.சோமநாத் கூறும்போது, 'விண்வெளி நிறுவனம் வருகிற 14-ஆம் தேதி விண்ணில் ஏவும் சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்டு 23 அல்லது 24ஆம் தேதி நிலவில் லேண்டரை தரையிறக்க முயற்சிக்கும்' என்றார்.

No comments:

Post a Comment