இம்பால், ஜூலை 22 மணிப்பூரில் கடந்த மே 3-ஆம் தேதி மெய்தி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டு தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த சூழலில், மணிப்பூரில் உள்ள ஒரு மாவட்டத்தில் குகி பழங்குடி சமூக பெண்கள் இருவரை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. இது தொடர்பான காட்சிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவி வைரலானது. கடந்த மே 3-ஆம் தேதி யில் இருந்து மணிப்பூரில் இணைய தளம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலை யில், இந்த பாலியல் வன் கொடுமை காட்சிப் பதிவு சமீபத்தில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், எங்கள் சமூகத் தில் இதுவரை 114 பேர் உயிரிழந்து உள்ளனர் என குகி சமூகத்தின் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக நேற்று அறிக்கை வெளியிட்டு உள்ளனர். இம்பால் நகரில் கடந்த மே 4-ஆம்தேதி குகி இனத்தின் மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, படு கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்றும் அவர்கள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர்.
லாங்கோ, நகாரியன் மலைப் பகுதியில் "நர்சிங் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு படுகொலை" என இது பற்றி கூட்டறிக்கையில் தெரிவித்து உள்ள அவர்கள் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஒட்டுமொத்த நாடும் கைகோக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
No comments:
Post a Comment