பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கல்வித் துறை உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கல்வித் துறை உத்தரவு

சென்னை, ஜூலை 20- உயர்கல்விக் கான சேர்க்கையை கருத்தில் கொண்டு, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்கி, அதை பயன்படுத்துவது குறித்து அவர் களுக்கு பயிற்சி அளிக்குமாறு முதன்மை  கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட் டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் வெளியிட்ட சுற்ற றிக்கை:

நிகழ் கல்வியாண்டு (2023-_2024) பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் கல்

லூரிகளில் உயர்கல்வி சேர்க்கை பெறு வதற்கு இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மேலும், பெரும்பாலான கல் லூரிகள் சேர்க்கை குறித்த தகவல் களை மின்னஞ்சல் வாயிலாகவே மாணவர்களுக்கு  வழங்குகின்றன. அதற்கேற்ப பிளஸ் 2 மாண வர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டியது கட் டாயம்.

இதற்கிடையே அரசுப் பள்ளி களில் பிளஸ் 2 பயிலும் மாணவர் கள் தங்கள் உயர்கல்வி தொடர் வதற்கு ‘நான் முதல்வன்’ திட்டத் தின் கீழ் இணையவழியில் விண் ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

இதற்காக மாணவர்கள் தங்கள் வகுப்பாசிரியர்கள் உதவியுடன் மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும். புதிதாக உருவாக்கப் பட்ட மின்னஞ்சல் முகவரியை ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்ற வேண் டும்.

அதன்பின் மாணவர்களுக்கு மின்னஞ்சலை பயன்படுத்துவது குறித்து ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும். இதுதவிர பிளஸ் 2 மாணவர்கள், தங்களின் புதிய மின் னஞ்சல் (இமெயில்) முகவரியை உருவாக்கி அதிலிருந்து நீரீtஸீss@ரீனீணீவீறீ.நீஷீனீ என்ற முகவரிக்கு ‘நான் மின்னஞ்சல் முகவரியை பெற் றேன்’ எனவும், ‘உயர்கல்வியில் மாணவர்களின் இலக்கு என்ன?’ என்ற விவரத்தையும் அனுப்ப வேண்டும்.

இந்த பணிகளை வரும் ஜூலை 30-ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment