ஜம்மு - காஷ்மீர் சிறப்புத் தகுதி ரத்துக்கு எதிரான வழக்கு ஆகஸ்டு 2 முதல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 13, 2023

ஜம்மு - காஷ்மீர் சிறப்புத் தகுதி ரத்துக்கு எதிரான வழக்கு ஆகஸ்டு 2 முதல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை


புதுடில்லி, ஜூலை 13-  காஷ்மீர் சிறப்புத் தகுதி ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆகஸ்ட் 2 முதல் தினமும் விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆ-ம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆ-ம் தேதி காஷ்மீரின் சிறப்புத் தகுதியை ஒன்றிய அரசு ரத்து செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. இவை ஒரே வழக்காக விசாரிக்கப்படுகிறது. இந்த வழக் கில் ஒன்றிய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில்  10.7.2023 அன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப் பதாவது:

சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமைதி திரும்பி உள்ளது. கடந்த 2018ஆ-ம் ஆண்டில் காஷ்மீரில் 1,767 கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. நடப் பாண்டில் இதுவரை கல்வீச்சு சம்பவங்கள் எதுவும் நடைபெற வில்லை. பள்ளி, கல்லூரிகள், பல் கலைக்கழகங்கள், மருத்துவமனை கள், வர்த்தக நிறுவனங்கள் இயல் பாக செயல்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து மக்களின் வருவாய் பெருகியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அமைதி, வளர்ச்சி, நிலையான தன்மை ஏற்பட்டி ருக்கிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதி பதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் அமர்வு முன்பு 11.7.2023 அன்று விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தலைமை நீதிபதி சந்திர சூட்கூறும் போது, ‘‘வழக்கில் தொடர்புடைய அனைத்துத் தரப் பினரும் தங்கள் தரப்பு விளக்கங்கள், ஆதாரங்களை வரும் 27ஆ-ம் தேதிக் குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் திங்கள், வெள்ளிக்கிழமை தவிர்த்து நாள் தோறும் விசாரணை நடத்தப்படும்" என்று உத்தரவிட்டார்.

அய்ஏஎஸ் அதிகாரி உட்பட 2 பேரின் மனுக்கள் திரும்பப் பெறப் பட்டன

கடந்த 2009ஆ-ம் ஆண்டு குடிமைப்  பணி தேர்வில் காஷ்மீரை சேர்ந்த ஷா பைசல் முதலிடம் பிடித்து அய்ஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். கடந்த 2019இல் அரசுப் பணியில் இருந்து விலகிய அவர், புதிதாக அரசியல் கட்சியை தொடங்கினார்.

அப்போது காஷ்மீருக்கு சிறப் புத் தகுதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். கடந்த 2022 ஆகஸ்டில் அரசியலில் இருந்து விலகிய அவர் மீண்டும் ஒன்றிய அரசுப் பணியில் இணைந் தார்.

இதையடுத்து காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட் டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை அவர் திரும்பப் பெற்றுள் ளார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தின் மேனாள் துணைத் தலைவர் ஷீலா ரஷீத்தும், காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரும் தனது மனுவை திரும்பப் பெற்றிருக்கிறார்.

No comments:

Post a Comment