ஒடிசா ரயில் விபத்து மேலும் 29 உடல்கள் அடையாளம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 2, 2023

ஒடிசா ரயில் விபத்து மேலும் 29 உடல்கள் அடையாளம்

புவனேஸ்வர்,ஜூலை2 - ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த மாதம் 2ஆம் தேதி 3 ரயில்கள் மோதி விபத்துக்குள் ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த விபத் தில் 293 பேர் பரிதாபமாக உயிரிழந் தனர்.

இதில் 81 பேரின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அள வுக்கு சிதைந்து விட்டன. எனவே அவை அனைத்தும் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள் ளன.

அதேநேரம் இந்த உடல்களை அடையாளம் காண்பதற்காக அவற்றின் உறவினர்களிடம் மர பணு பரிசோதனை நடத்தப்பட் டன. இந்த பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி இருக் கின்றன.

அவற்றின் அடிப்படையில் 29 உடல்கள் அடையாளம் காணப் பட்டு உள்ளன. எனவே அவற்றை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகளில் புவனேஸ்வர் மாநக ராட்சி நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.

இது குறித்து மாநகராட்சி மேயர் சுலோச்சனா தாஸ் கூறு கையில், 'குறிப்பிட்ட சில உடல் களுக்கு பல குடும்பங்கள் உரிமை கோரியதால் அவற்றுக்கு மரபணு பரிசோதனை நடத்த வேண்டியிருந்தது.

தற்போது அடையாளம் காணப் பட்டுள்ள 29 உடல்களில் ஒன்று மட்டும் ஒடிசாவை சேர்ந்த குடும் பத்தினருடையது. மீதமுள்ள அனைத்தும் பெரும்பாலும் மேற்கு வங்காளம் மற்றும் பீகாரை சேர்ந் தவை' எனக்கூறினார்.

அடையாளம் காணப்பட்ட உடல்களை பெறுவதற்கு சம்பந்தப் பட்ட குடும்பத்தினர் புவனேஸ்வர் வந்து கொண்டிருப்பதாக கூறிய சுலோச்சனா தாஸ், ஏற்கெனவே 5 குடும்பத்தினர் எய்ம்ஸ் மருத்துவ மனை வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்டு உள்ள உடல்களை அவற்றின் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய் துள்ளதாகவும் புவனேஸ்வர் மாநகராட்சி மேயர் கூறினார்.

அடையாளம் காண முடியாத இந்த 81 உடல்களுக்காக 88 குடும் பத்தினரிடம் இருந்து மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டதா கவும், இந்த பரிசோதனை முடி வுகள் வெளியாக சுமார் 20 நாட்கள் வரை ஆனதாகவும் அதி காரிகள் தெரிவித்தனர்.

தற்போது 29 உடல்கள் மட் டுமே அடையாளம் காணப்பட்டுள்ள நிலை யில், மீதமுள்ள உடல்களின் பரிசோ தனை முடிவுக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment