கலாசேத்ரா பாலியல் வழக்கு பேராசிரியர் ஹரி பத்மன் மீது 250 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 28, 2023

கலாசேத்ரா பாலியல் வழக்கு பேராசிரியர் ஹரி பத்மன் மீது 250 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னை, ஜூலை 28 -  கலா சேத்ரா பாலியல் புகார் வழக்கு தொடர்பாக பேராசிரியர் ஹரிபத்மன் மீது 250 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. 

சென்னை திருவான் மியூரில் உள்ள கலா சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப் பட்டதாக, பாதிக்கப் பட்ட மாணவிகள் கடந்த மார்ச் மாதம் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் துன்புறுத்தல், பெண் ணின் கண்ணியத்தை அவமதித்தல் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் பேராசிரி யர் ஹரிபத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிந்தனர். மேலும், தலைமறைவான அவரை கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலில் சிறை யில் அடைத்தனர். 

இவ்விவகாரத்தில் ஹரிபத்மன் மட்டுமன்றி மேலும் சில ஊழியர்க ளும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், ஜாதி ரீதியாக பாகுபாடு பார்த் ததாகவும் பல்வேறு குற் றச்சாட்டுகளை மாணவி கள் முன் வைத்தனர். இதுதொடர்பாக மாநில மகளிர் ஆணையமும் தலையிட்டு விசாரணை நடத்தியது. அப்போது நூற்றுக்கணக்கான மாணவிகள் புகார் அளித்தனர். இதன்படி 162 பேர் புகார் அளித்த தைத் தொடர்ந்து மாநில மகளிர் ஆணையம் அப் புகார்களை சென்னை காவல் துறைக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில் பாலி யல் புகார் தொடர்பாக இதுவரை 50-க்கும் மேற் பட்ட மாணவிகளிடம் அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையி னர்  நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி விவ ரங்களைச் சேகரித்துள்ள னர். இந்த நிலையில், பேராசிரியர் ஹரிபத்மன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று(27.7.2023) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 250 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர்  தாக்கல் செய்துள்ளனர். 

பேராசிரியர் ஹரிபத் மன் கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்கும் மேலா கச் சிறையில் இருந்ததை தொடர்ந்து கடந்த ஜூன் 6ஆ-ம் தேதி அவருக்கு சென்னை சைதாப் பேட்டை நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியது. 

நிபந்தனை பிணை யில் வெளியே வந்தஹரி பத்மன் தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment