ஜூலை 22 முதல் பொறியியல் கல்லூரி கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்டார் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 14, 2023

ஜூலை 22 முதல் பொறியியல் கல்லூரி கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்டார் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி

சென்னை, ஜூலை 14 -  பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டில் 446 கல்லூரிகளில் உள்ள 1.54 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5ஆ-ம் தேதி தொடங்கி ஜூன் 4ஆ-ம் தேதி வரை நடந்தது.

பொறியியல் கல்லூரிகளில் சேர 2.29 லட்சம் மாணவ, மாணவி கள் விண்ணப்பித்தனர். அதில் 1.88 லட்சம் பேர் விண்ணப்பக் கட்ட ணத்துடன் சான்றிதழ்களை பதி வேற்றம் செய்தனர். இவர்களுக் கான ரேண்டம் எண் கடந்த ஜூன் 6ஆ-ம் தேதி வெளியானது.

தொடர்ந்து, ஜூன் 20ஆ-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந் தது. இதனைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக் கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 102 மாணவர் கள் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப் பெண் பெற்றுள்ளனர். இதில் 1,06,384 மாணவர்கள், 72,558 மாணவிகள், மூன்றாம் பாலினத் தவர்கள் 17 பேர் என 1,78,959 பேர் மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றனர்.

தகுதியின்மை காரணமாக 3,828 விண்ணப்பங்களும், ஒன் றுக்கு மேற்பட்ட பதிவு காரணமாக 5,060 விண்ணப்பங்களும் நிராகரிக் கப்பட்டன.

இந்நிலையில், இந்த கல்வியாண் டுக்கான பொறியியல் கலந்தாய்வுக் கான அட்டவணையை உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று (13.7.2023) வெளியிட்டார். இதன் படி, பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கு கிறது. ஜூலை 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 28ஆம் தேதியில் இருந்து 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

ஜூலை 28ஆம் தேதியிலிருந்து தொடங்கி ஆகஸ்ட் 9 வரை முதல் சுற்று கலந்தாய்வும், ஆகஸ்ட் 9ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை 2ஆம் சுற்று கலந் தாய்வும் நடைபெறுகிறது. செப் டம்பர் 15ஆம் தேதிக்குள் 3 சுற்று கலந்தாய்வு முடிந்த பிறகு காலியிடங்கள் இருக்கும் பட்சத்தில் சிறப்பு கலந்தாய்வு நடைபெறும்.

"வழக்கமாக 4 சுற்றுகளாக நடத்தப்படும் கலந்தாய்வு, இந்த ஆண்டு 3 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் 11,804 பேருக்கு, 7.5% இட ஒதுக் கீட்டின் கீழ் இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன; 236 பேர் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளனர்.

பொறியியல் படிப்புகளில் காலி யிடங்கள் இல்லாமல் அனைத்து இடங்களையும் நிரப்புவதற்கான வழிமுறைகளை கையாள, முயற்சி கள் மேற்கொள்ளப்படும்" என்று அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment