கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - 20.7.2023 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - 20.7.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்

* பெங்களூருவில் உருவான ‘இந்தியா’ கூட்டணி, முதல் முறையாக 2024 பொதுத் தேர்தலில் இருமுனை போட்டிக்கு தயாராகி விட்டது என்கிறது தலையங்க செய்தி.

*மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு, அதானி மீதுள்ள முறைகேடு குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எந்த சமரசமும் இன்றி வாதாடும் என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி.


டெக்கான் கிரானிக்கல், சென்னை

* ஊழல் வழக்கில் உள்ளவர்களை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் குற்றச் சாட்டை பிரதமர் மோடி சொல்வது நல்ல நகைச்சுவை என மு.க.ஸ்டாலின் கிண்டல்.

* கட்டணமில்லா பேருந்து, சுயமரியாதை, சுதந்திரம் இவற்றை பெண்களுக்கு அளித்துள்ளது என விஜய பாஸ்கர் தலைமையிலான மாநில திட்டக்குழு அறிக்கை.


இந்தியன் எக்ஸ்பிரஸ்

* சட்டப் பிரிவு 370 வழக்கில், தலைமை நீதிபதி பொது நல வழக்குகளில் ஒரு முக்கியமான சீர்திருத்தத்தை தொடங்கியுள்ளார். நீதிமன்றத்தில் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் மனுதாரரின் பெயர் அல்ல, பிரச்சினை. இந்த சூழ்நிலைகள், இந்த வழக்கு இனிமேல் அரசமைப்பின் 370ஆவது பிரிவு என அழைக்கப்படும் என்ற உத்தரவை பிறப்பிக்க தலைமை நீதிபதியை தூண்டியது. எனவே, இந்த வழக்கு இப்போது "அரச மைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவின் விஷயத்தில்" என்று அறியப்படும் என அறிவித்துள்ளதை பாராட்டி உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் கருத்து.


தி இந்து:

* ஜோத்பூரில் உள்ள ஜெய் நரேன் வியாஸ் பல்கலைக் கழக வளாகத்தில் 17 வயது தாழ்த்தப்பட்ட சமூக சிறுமியை கும்பல் பாலியல் வன்முறை செய்ததாகக் கூறப்படும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை சேர்ந்தவர்கள் என்று காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

* தமிழ்நாட்டில் திமுக அமைச்சர்களை அமலாக்கத் துறை குறிவைப்பது பாஜகவின் மிரட்டல் உத்தியாகவே பார்க்கப்படுகிறது என்கிறார் கட்டுரையாளர் பி.கோலப்பன்.


தி டெலிகிராப்:

* கண்டனம் தெரிவித்து சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டுக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு.

* மம்தா புதன்கிழமை பாஜகவை கேலி செய்தார், பெங்களூரில் இருந்து இந்திய கூட்டணியை அறிவித்ததிலிருந்து பாஜக பயத்தில் நடுங்குகிறது. காவி முகாம் - பாஜக அல்லாத அரசாங்கங்களை கவிழ்ப்பதில் எப் போதும் பிஸியாக உள்ளது.  இப்போது ஒன்றியத்தில் அதன் சொந்த அரசாங்கம் விரைவில் கவிழும் என்பதை உணர்ந்துள்ளது என மம்தா சாடல்.


- குடந்தை கருணா

No comments:

Post a Comment