வல்லம். ஜூலை 24- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் புகையிலை பொருட்கள் அதன் பயன்பாடு ஒழிப்பு பற்றிய - விழிப்புணர்வு நிகழ்ச்சி 18.07.2023 அன்று பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மு.சிங்காரவேல் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். குறிப்பாக குட்கா, பீடி, சிகரெட், போன்ற பல்வேறு புகையிலை தயாரிப்பு பொருட்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து கூறினார். மேலும் புகையிலை யைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களினால் வரும் புற்று நோய் பற்றி விளக்கினார். குறிப்பாக பாதிக் கப்பட்டவர்கள் வெளி வருவதற்கான வழி முறைகளை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து மாணவர்கள் எழுப்பின கேள்விகளுக்கு விளக்கமாக பதில் கூறினார்.
இந்நிகழ்வில் புகையிலை போதை பொருட்களை உட்கொள்ள மாட்டோம் என்று அனைவரும் உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர்.
இறுதியாக நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணப்பாளர் பேரா சந்திரகுமார் பீட்டர் தனது உரையில் மாணவர்கள் எவ்வாறு இதற்கு அடிமையாகிறார்கள், பாதிக் கப்படுகிறார்கள் என்று விளக்கி கூறினார். சுகாதார ஆய்வாளர் இரா, அகேஸ் வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரா. இஸ்மாயில், ரம்யா மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட (மி மற்றும் மி மி அலகுகள்) அலுவலர்கள், தொண்டர் கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
நிகழ்ச்சியில் முனைவர் வசந்த், முனைவர் குமார், பி.இளங்கோ, தொடர்பு அலுவலர் மற்றும் பணியா ளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment