புதுடில்லி, ஜூலை 2 ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு மத்தியப் பிரதே சத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான சந் திரசேகர் கவுர் என்பவர் ரயில் வேயில் தற்போதைய நிலையில் உள்ள காலிப் பணியிடம் குறித்து ஆர்டிஅய் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ரயில்வே அமைச்சகம் கொடுத்துள்ள பதிலில் ‘கடந்த ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி, ரயில்வேயில் 2,74,580 குரூப் - 'சி' பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 1,77,924 பணியிடங்கள் பாது காப்புப் பிரிவில் காலியாக உள்ளன’ என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த ஆண்டு அக்டோபருக் குள் 1.52 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. அவற்றில் 1.38 லட்சம் பணியிடங்களுக்கான நியமன கடிதங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. அதில் 90,000 பேர் பணியில் சேர்ந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment