சென்னை, ஜூலை 26- ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெற வுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இரா மநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் இன்று (25.7.2023) கைது செய்யப்பட்டுள் ளனர். இலங்கை கடற்படையின ரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப் படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கும், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தொடர்ந்து கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி வருகி றார். இருந்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூலை 20இல் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்திடவும், தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதும் குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும், இலங் கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தும் இலங்கை அதிபரை வலியுறுத்திட கேட்டுக்கொண்டார்.
மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கள் தொடர்பு கொண்டு, தமிழ்நாடு மீனவர்கள் சந்தித்து வரும் பிரச் சினைகள் குறித்து இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம் பேச வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு மீனவர் கள் தொடர்ச்சியாக கைது செய் யப்படுவது, தாக்கப்படுவது, அவர் களது படகுகள் பறிமுதல் செய்யப் படுவது போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும், அதனை தடுத்திட கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இராமநாதபுரத்தில் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி மாநில மாநாடு நடத்தவுள்ளது.
இம்மாநில மாநாட்டில் தமிழ் நாடு முதலமைச்சர்ர் கலந்து கொள்ள வேண்டும் என்று மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களின் அழைப்பினை ஏற்று முதலமைச்சர் ஆகஸ்ட் 18-ஆம் தேதி இராம நாதபுரத்தில் நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார் என்று மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பரா மரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment