ஒரத்தநாடு வட்டாரம் தொண் டராம்பட்டு அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகா தார ஆய்வகக் கட்டடம், ஒரத்த நாடு வட்டாரம் வடக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தெக் கூர் துணை சுகாதார நிலைய மய் யக்கட்டடம் ரூ. 30லட்சம் மதிப் பீட்டிலும்,,வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இராவுசாப்பட் டியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலைய மய்ய கட்டடம், ஒரத்தநாடு அரசு மருத் துவமனையில் ரூ.23.30 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஊரக சித்த மருந்தக கட்டடம், ஒரத்தநாடு வட்டம் வாண்டையார்இருப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.23.30 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஊரக சித்த மருந்தக கட்ட டம் என தமிழ்நாடு மருத்துவத் துறை சார்பில் கட்டப்பட்ட கட்ட டங்களை அமைச்சர் மா.சுப்பிர மணியன் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆலத் தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (30.7.2023) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை- மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் கடந்த ஜூன் 27 அன்று 'இதயம் காப்போம்' என் கின்ற உன்னத திட்டம் துவக்கி வைக்கப்பட்டது, இத்திட்டத்தின் படி கூட்டு மருந்துகள் (14), 10,999 எண்ணிக்கையிலான ஆரம்ப சுகா தார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் இருப்பு வைக்க அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்றைய ஆய்வில் விசாரித் ததில் கடந்த ஒரு மாதத்தில் அறி வழகன் (வயது 36), பாஞ்சாலி (வயது 50), ஞானசரஸ்வதி (வயது 42) ஆகிய மூவரின் உயிர்கள் இத் திட்டத்தின் மூலம் இந்த குறிப் பிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் காப்பாற்றப் பட்டுள்ளது எனும் மகிழ்ச்சியான செய்தி அறியப்பட்டது. இது போல் அனைத்து சுகாதார நிலை யங்களில் செயலாக்கத்தில் உள் ளது என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment