பெங்களூரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் 17ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 4, 2023

பெங்களூரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் 17ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

பெங்களூரு, ஜூலை 4  பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த 23ஆம் தேதி எதிர்க் கட்சி தலைவர்களின் கூட் டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார் பில் மல்லிகார் ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், டி.ஆர்.பாலு, தேசிய வாத காங் கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், லாலு பிர சாத் உள்ளிட்ட தலை வர்கள் என 16 எதிர்க் கட்சி தலைவர்கள் உள் பட 6 மாநில முதல மைச்சர்கள் பங்கேற் றனர். 

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 13,14ஆம் தேதி களில் பெங்க ளூருவில் நடைபெறும் என அறி விக்கப்பட்டது.  இந்த நிலையில், பெங்களூரு வில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட் சிகள் கூட்டம் நடை பெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment