பதிலடிப் பக்கம் - ரூ.15 லட்சம் பிரச்சினை: எங்கே சொன்னார் பிரதமர்? - இங்கே சொன்னார் வானதி அவர்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 14, 2023

பதிலடிப் பக்கம் - ரூ.15 லட்சம் பிரச்சினை: எங்கே சொன்னார் பிரதமர்? - இங்கே சொன்னார் வானதி அவர்களே!

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் 

வழங்குவதாக பிரதமர் பேசியதற்கான ஆதாரத்தை  

முதல்வர் வெளியிட வேண்டும்

- வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

('இந்து தமிழ் திசை', 12.7.2023 பக்கம் 4)

எங்கே சொன்னார் என்று கேட்கும் வானதிக்கு இங்கே சொன்னார் என்பதற்கான பதிலடி - ஆதாரம் இதோ:

இதோ மோடி பேசுகிறார்

"நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணத்தைக் கொண்டுவந்து அனைவரது வங்கிக்கணக்கிலும் ரூ 15 லட்சம் போடுவேன் - மோடி அளித்த வாக்குறுதியும். அமைச்சர்கள் கொடுத்த உத்தரவாதமும்!

தேர்தல் பரப்புரையின் போது கான்கேரில் (சத்தீஸ்கர்) பேரணியில் 7.11.2013 கலந்துகொண்ட மோடி பேசும் போது, “இந்த மோசடியாளர்கள் வெளி நாட்டு வங்கிகளில் குவித்து வைத்துள்ள பணத்தை, திருப்பிக் கொண்டு வந்து, ஒவ்வொரு இந்தியனும் ரூ.15 முதல் ரூ. 20 லட்சம் வரை அவரவர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்துவேன். கருப்புப்பணத்தை மீட்டு அதை மக்கள் கைகளில் ஒப்படைப்பேன்" என்று வாக்குறுதி அளித்தார்.

விரைவில் ரூ 15 லட்சம் வரும்:

ராம்தாஸ் அத்வாலே (2018)

மோடியின் இந்த வாக்குறுதி பற்றி ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறும் போது மோடி அனைத்துமக்களின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப் போகிறார் என்றார். 

2014 தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, ''நாங்கள் வெற்றி பெற்றால் எல்லோர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம்'' என்று கூறினார். "வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணங்களை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வருவோம். பின் அதை மக்களின் வங்கிக் கணக்கில் போடுவோம்" என்று கூறினார்.

ஆனால் பாஜகவின் ஆட்சியில் 500, 1000 ரூபாய் கையை விட்டுப் போனதே தவிர ஒரு ரூபாய் கூட வங்கிக் கணக்கில் வரவில்லை. கடைசியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, அதெல்லாம் தேர்தல் ஜும்லா (அக்கப் போர் - வேடிக்கைப் பேச்சு) என்று கூறும் அளவிற்கு சென்றார். இதனால் பாஜக மீது பெரிய அளவில் விமர்சனம் வைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ''நாங்கள் 15 லட்சம் ரூபாய் பணம் போட தயாராக இருக்கிறோம். ஆனால் மக்களின் வங்கிக் கணக்கிற்கு அது ஒரேயடியாக வராது. கொஞ்சம் கொஞ்சமாக வரும். இப்போது உடனடியாக போட முடியாது'' என்று கூறினார். அதோடு, நாங்கள் ரிசர்வ் வங்கியிடம் இதற்காகப் பேசி இருக்கிறோம். அவர்கள் பணம் கொடுக்க மறுக்கிறார்கள். இதில் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் இருக்கிறது, என்றும் விளக்கம் அளித்தார்.

இதோ பிஜேபி அமைச்சர் 

நிதின் கட்கரி பேசுகிறார்

வெற்றி பெற வாக்குறுதிகளை அளிப்போம் மக்கள் மறந்துவிடவேண்டும்! - நிதின் கட்கரி 10.10.2018,

ரூ.15 லட்சம் தர்றதா பொய் சொன்னோம்... மக்களும் நம்பி ஓட்டுப்போட்டுடாங்க... ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி 

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் அளிப்பதாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வாக்குறுதியை அள்ளி வீசினார். இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒன்றிய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்காரி “கடந்த தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்பார்க்கவில்லை, அதனாலேயே நாங்கள் பெரிய வாக்குறுதிகளை அள்ளி வீசினோம். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்து விட்டோம். இதனால் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் நினைவில் வைத்துள்ளார்கள். எங்கள் வாக்குறுதிப்படி ஏன் நிறைவேற்றவில்லை என்று எங்களிடம் கேட்டால் தேர்தல் வெற்றிக்காக கொடுக்கும் வாக்குறுதிக்கு எல்லாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களே என்று சிரித்து விட்டு, நகர்ந்து விடுகிறோம் என நிதின் கட்கரி கூறியுள்ளார்.

'வரும், ஆனா ‘லேட்டா வரும்': ரூ.15 லட்சம் டெபாசிட் குறித்து அமைச்சர் பதில்

மக்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம், ஆனால், சிறிது தாமதமாக வரும் என்று அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே விளக்கம் அளித்தார்.

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மோடி, அரசை ஏமாற்றி, வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கிய கறுப்புப் பணம் மீட்கப்படும். அவ்வாறு மீட்கப்படும்போது, ஒவ்வொரு இந்தியர்கள் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

இன்னும் என்ன ஆதாரம் வேண்டும் வானதி அவர்களே?

No comments:

Post a Comment