நத்தம், ஜூலை 9 - இன்று (9.7.2023) நாகை, திருமருகல் ஒன்றியம் - சி.பி.கண்ணு நினைவரங்கில் காலை 9 மணியளவில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது.
நிகழ்விற்கு நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ நெப்போலி யன் தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா வர வேற்று உரையாற்றினார். தலை மைக்கழக அமைப்பாளார் சு.கிருஷ்ணமூர்த்தி நிகழ்வினை தொடங்கி வைத்தார். பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் இரா.சிவக்குமார், மாநில இளைஞ ரணி துணைசெயலாளர் நாத்திக பொன்முடி, மாநில சட்டக் கல் லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன், மாவட்ட பொறுப் பாளர் பொன்.செல்வராசு, திருமரு கல் ஒன்றிய தலைவர் சின்னதுரை, கீழையூர் ஒன்றிய தலைவர் ரெ.ரெங் கநாதன், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட செயலாளர் தியாக சுந்தரம், மண்டல பகுத்தறிவு ஆசி ரியரணி செயலாளர் முத்துகிருஷ் ணன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் மு.குட்டிமணி, ஒன் றிய து.செயலாளர் ஒக்கூர் ராஜேந் திரன், மகளிர் பாசறை மாவட்ட செயலாளர் ரம்யா, நாகை நகர பொறுப்பாளர் ரவி ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
முதல் வகுப்பாக தந்தை பெரியார் ஓர் அறிமுகம் என்னும் தலைப்பில் பொதுசெயலாளர் துரை.சந்திரசேகரன் வகுப்பெடுத் தார். "பேய் ஆடுதல், சாமி ஆடுதல் அறிவியல் விளக்கம்" என்னும் தலைப்பில் மருத்துவர் இரா.கவு தமன் வகுப்பெடுத்தார். மூன்றாவது வகுப்பாக "தந்தை பெரியாரும், ஜாதி ஒழிப்பும்" என்ற தலைபில் வழக்குரைஞர் பூவை. புலிகேசி, நான்காவது வகுப்பாக மா.அழகிரி சாமி, அய்ந்தாவது வகுப்பாக மாநில துணை பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் "தந்தை பெரியாரின் பெண்ணுரி மைச் சிந்தனைகள்" என்னும் தலைப்பிலும் அதனை தொடர்ந்து பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களும் மாணவர்களுக்கு வகுப்பெடுத்து சிறப்பித்தனர்.
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சிப்பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
No comments:
Post a Comment