11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்தடைந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மலேசிய திராவிடர் கழகத் தேசியத் துணைத் தலைவர் சா.பாரதி, பொருளாளர் கு.கிருஷ்ணன், தேசிய உதவித் தலைவர் வீ.இளங்கோ உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். உடன் பெரியார் பன்னாட்டமைப்பு (மலேசியா கிளை) தலைவர் மு.கோவிந்தசாமி, இயக்குநர் கே.ஆர்.ஆர்.அன்பழகன் ஆகியோர். மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் மதியுரைஞர் 'கொள்கைச்சுடர்' ரெ.சு.முத்தையா, தேசியத் தலைவர் நாக பஞ்சு ஏ.எம்.என், இளைஞரணித் தலைவர் த.நெ.நெடுஞ்சுடர், மகளிர் பிரிவு தமயந்தி, இதழாளர் நக்கீரன் சுப்பிரமணியம் ஆகியோர் சால்வை அணிவித்தும், தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் சமூகநீதி நாள் மலர், பெரியார் கையொப்பச் சுவடி ஆகியவற்றை வழங்கியும் வரவேற்றனர். உடன்: திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்..
Friday, July 21, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment