' மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் 11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தமிழர் தலைவர் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 18, 2023

' மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் 11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தமிழர் தலைவர் பங்கேற்பு

2023 ஜூலை 21,22,23 ஆகிய நாள்களில் நடைபெறுகிற 11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் (International Association for Tamil Research) 11ஆம் மாநாடு மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறுகிறது. 2023 ஜூலை 21,22,23 ஆகிய மூன்று நாள் மாநாட்டினை மலேசிய நாட்டு பிரதமர் மாண்புமிகு அன்வர் இப்ராகிம் அவர்கள் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், பொது நல செயற்பாட்டாளர்கள், கல்லூரி - பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் என பல தரப்பினரும் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து உரையாற்றிட உள்ளனர்.

தமிழர் தலைவர் பங்கேற்பு

11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றார். மாநாட்டின் முதல் நாள்  (21.7.2023) நிகழ்வின் பொது  அரங்கில் 'வளர்ச்சி நோக்கில் தமிழ்' எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை ஆற்ற இருக் கின்றார். 22.7.2023 அன்று  மலேசியப் பிரதமர் தொடங்கி வைத்திட உள்ள அமர்வில் சிறப்பு அழைப்பாளராகவும் தமிழர் தலைவர் பங்கேற்கிறார்.

தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கேற்றிட சென்னையிலிருந்து தமிழர் தலைவர் கடந்த 15.7.2023 அன்று சிங்கப்பூர் கிளம்பிச் சென்றுள்ளார். அங்கிருந்து கோலாலம்பூருக்குச் செல்கிறார்.மாநாட்டிற்கு  தமிழர் தலைவருடன் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர்  ச. பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஆகியோரும் செல்கின்றனர்.

No comments:

Post a Comment