எல்லை பாதுகாப்புப் படையில் வேலை 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 12, 2023

எல்லை பாதுகாப்புப் படையில் வேலை 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு


ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் (டிரைவர்) பணிக்கு 10ஆம் வகுப்பு படித்த ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

பணி: Constable (Driver).

மொத்த காலியிடங்கள்: 458.

ஊதியம்: ரூ.25,500- 69,100.

வயது: 26.7.2023 தேதியின்படி 21 முதல் 27க்குள். வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: குறைந்த பட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்று உரிமம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: குறைந்த பட்சம் 170 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீ அகலமும், 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் குறைந்தபட்சம் 162.5 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீயும் இருக்க வேண்டும். 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். அனைத்து விண்ணப் பதாரர்களும் உயரத்திற்கேற்ற எடை மற்றும் ஆரோக்கி யமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

இந்தோ- திபெத் எல்லை படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதி யானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். 10ஆம் வகுப்பு தகுதி அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும்.

உடல் திறன் தேர்வில் 1.6 கி.மீ., தூரத்தை 6லு நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். உடற்தகுதி தேர்வில் விண்ணப்பதாரரின் உயரம், உடல் எடை பரிசோதிக்கப்படும்.

கட்டணம்: ரூ.100/-. பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மேனாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 26.7.2023.

No comments:

Post a Comment