மனிதரில் இலட்சக்கணக்கானோர் வீடின்றி வாழ வதைபடுவது கண்களுக்குத் தெரியவில்லையா? இந்த மனிதர்களைக் கவனியாது, இவர்களுக்கு வீடு வாசல் வேண்டாமா என்பதைக் கவனியாது, கடவுள் ஆலயங்களின் திருப்பணிப் பேரால் எவ்வளவோ பணத்தை விரயம் செய்யலாமா? பாலின்றி வாடும் பச்சைக் குழந்தைகள் இலட்சக் கணக்கில் இருக்க, நெய் என்பதைக் கண்ணில் கண்டறியாத குடும்பங்கள் எவ்வளவோ இலட்சம் இருக்க, பழனி, திருவண்ணாமலை, சிறீரங்கம் முதலிய இடங்களில் ஆயிரக்கணக்கான குடம் பாலையும் கொட்டிச் சாக்கடைக்குப் போய்ச் சேரும்படி பாழாக்குவதும், ஆயிரக்கணக்கான டின் நெய்யை விளக்கை எரித்தும், நெருப்பில் கொட்டியும் வீணாக்குவதும் சரியா? கடவுள் உணர்ச்சியை இப்படித்தான் காட்டுவதா? பாலும் நெய்யும் மக்களுக்கு உண்ண ஏற்பட்டதா? கல்லிலும், நெருப்பிலும் கொட்ட ஏற்பட்டதா? ஏ, ஆத்திகர்களே! உங்களை நோக்கி நான் இதைக் கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment