கழகப் பொறுப்பாளர்கள், அனைத்துக்கட்சியினர் பங்கேற்பு
பொத்தனூர்,ஜூலை5- முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அய்யா அவர் களுக்கு 101 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா 2.7.2023. ஞாயிறு காலை முதல் மாலைவரை பொத்தனூர் பழனி யாண்டி செண்பகவள்ளி திருமண மண் டபத்தில் சிறப்புடன் கொண்டாடப் பட்டது.
திராவிடர் கழகம், தி.மு.க, மற்றும் ஊரின் முக்கியப் பிரமுகர்கள் வாழ்த் துரை வழங்கினார்கள். காலை 9.00 மணியளவில் விழாநாயகர் க.சண்முகம் அவர்கள் பொத்தனூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கும், அன்னை நாகம் மையார், அன்னை மணியம்மையார் படத்திற்கும் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.
ஊர் முழுவதும் கட்டப்பட்டகழகக் கொடிகள் அனைவரையும் வரவேற்ப ளித்ததுபோல் காட்சியளித்தது.வாழ்த் தரங்கத்திற்கு கழகக் காப்பாளர் பழனி. புள்ளையண்ணன் தலைமை தாங் கினார். பொத்தனூர் ம.சிவகுமாரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில், கபிலர் மலை தி.மு.க ஒன்றிய செயலாளர் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் தி.மு.க சாமிநாதன், மாவட்ட தி.மு.க துணை செயலாளர் மயில்சாமி, பேரூர் தி.மு.க செயலாளர்-பேரூராட்சித் தலை வர் கருணாநிதி, டி.ஆர்.ரங்கசாமி, பி. முருகேசன், சோமசேகர், கண்ணன், ரமேஷ், வைரமணி, கடலை சேகர் ஆகிய தி.மு.க பொறுப்பாளர்கள் வாழ்த்துரை வழங்கியும் பயனாடை அணிவித்தும் சிறப்புச் செய்தனர்.
முன்னதாக திராவிடர் கழக வழக் குரைஞரணி தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், அவருடன் வழக்குரை ஞர்கள் கே.வீரமணி, ஜெ.துரைசாமி, ஆலந்தூர் வாஞ்சிநாதன், நம்பியூர் மு.சென்னியப்பன் ஆகியோர் அய்யா க.சண்முகம்.அவர்களுக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத் தலைவர் இரா.நற்குணன் வாழ்த்துத் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து விழா நாயகர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட தலைவர் கே.குமார், செயலாளர் வை.பெரியசாமி, துணைச் செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட துணைத் தலைவர் அசேன். ப.க மாவட்ட தலைவர் வழக்குரைஞர் ப.இளங்கோ, குமாரபாளையம் சு.சரவ ணன், சீ.சந்தோஷ் ,ச.தமிழரசன், சுரேஷ், ராஜசேகரன், அறிவாயுதம், வீர.முருகன், ப.செல்வகுமார், அன்புமணி, கேப்டன் அண்ணாதுரை பரிமளா, ஈழக் கனிமலர், நா.பாலசுந்தரம், ரேவதி ஆகியோர் நாமக்கல் மாவட்ட சார்பாகவும், கரூர் மாவட்ட தோழர்கள் மாவட்ட தலைவர் ப.குமாரசாமி, செயலாளர் ம.காளிமுத்து, வே.ராசு, இரா.பெருமாள், சி. அக்பர், அசோக் ஆகியோரும். சேலம் மாவட்டகழகக் காப்பாளர் கவிஞர் சி.சுப்பிரமணியன், ஆத்தூர் மாவட்ட செயலாளர் விடு தலை சந்திரன், தலைமைக்கழக அமைப் பாளர்கள் ஈரோடு த.சண்முகம், ஆத் தூர் சுரேஷ், சேலம் ராஜு, சேலம் மாவட்ட தலைவர் அ. இளவழகன், தமிழர் தலைவர், இளவரசன், பூபதி, ஆசிரியர் கந்தசாமி, ஓமலூர் ஒன்றிய தலைவர் பெ.சவுந்திரராஜன், ராஜேந்தி ரன் வாழ்த்துரை வழங்கியும் பயனாடை அணிவித்தும் சிறப்புச் செய்தனர்.
வாழ்த்தரங்கத்தைத் தொடர்ந்து. நூற்றாண்டு விழாக் கருத்தரங்கம் நடைபெற்றது. பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து - சுயமரியாதை வீரர் பொத்தனூர் க.சண்முகம் நூற்றாண்டு என்ற தலைப்பிலும், முனைவர் கடவூர் மணிமாறன் - சிந்துசமவெளி அகழாய்வு நூற்றாண்டு என்ற தலைப்பிலும், வேர் பலா அழகரசன்- சேரன்மாதேவி குரு குலப் போராட்ட நூற்றாண்டு என்ற தலைப்பிலும், வழக்குரைஞர் இரா.குடி யரசு-வைக்கம் போராட்ட நூற்றாண்டு என்ற தலைப்பிலும், வழக்குரைஞர் வை.பெரியசாமி-சுயமரியாதை இயக்க நூற்றாண்டு என்ற தலைப்பிலும், வழக் குரைஞர் ப.இளங்கோ - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு என்ற தலைப் பிலும் சிறப்பான- கருத்தாழமிக்க கருத் துக்களை தொகுத்தளித்தனர்.
இறுதியாக விழா நாயகரும் பெரியார் அறக்கட்டளைத் தலைவரு மான பொத்தனூர் க.சண்முகம்.அவர் கள் தமது ஏற்புரையில் - "80 ஆண்டு களுக்கு மேலாக தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோர் தலை மையில் பணிசெய்தேன் எஞ்சியிருக்கும் காலத்திற்கும் இப்பணியைத் தொடர் வேன்" என்று தமது ஏற்புரையில் குறிப் பிட்டார்.
குடும்ப உறவுகள் செ.கலைமணி -- மேகலா, ச.செங்குட்டுவன்-சாந்தி, மா. சிவக்குமரன் - புனிதவதி, விவேகானந்தன் -- தமிழரசி, இரவீந்திரன் - மலர்க்கொடி, மணிமேகலை - ராஜசேகரன், தங்காத் தாள்-சின்னப்பன், திரு ஏகம்பன்- புவ னேஸ்வரி, மாசிலாமணி -- ரிதனி, ஜெய மணிகண்டன் - அனிதா, சக்கரவர்த்தி -- குந்தவை (எ) சிந்துஜா, எஸ்.பி.எம். சண்முகம்-காமேஷ்வரி, டாக்டர் செந் தில்குமார்- டாக்டர் அருள்மொழி, சரஸ்வதி - பாபுஜி, சிறீதர் - ராஜவர்த்தினி, ரவிக்குமார்-ஞானப்பூங்கோதை, அறிவுடைநம்பி - ஞானப்பூம்பாவை, சி.ஞானசம்பந்தம்-கவிதா ஆகியோர் க.ச.நூற்றாண்டுவிழாவிற்கு வருகை தந்த அத்துணை பேருக்கும் அறுசுவை விருந்தளித்து மகிழ்ந்தனர். விழா இனிதாய் நிறைவடைந்தது.
No comments:
Post a Comment