மாநகராட்சி பள்ளிகளுக்கு நூலகங்கள் புத்தாக்க வகுப்பறைகள் அமைக்க ரோட்டரி சங்கத்தின் செயல்திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 29, 2023

மாநகராட்சி பள்ளிகளுக்கு நூலகங்கள் புத்தாக்க வகுப்பறைகள் அமைக்க ரோட்டரி சங்கத்தின் செயல்திட்டம்

 சென்னை, ஜூன் 29 - சென்னை அய்டிசி கிராண்ட் சோழா அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் நெக்ஸ்ட் ஜென் 2023-2024-க்கான தலைவராக டாக்டர் சி.ஏ.அபிசேக் முரளி மற்றும் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக ஒன்றிய வருமான வரித்துறை முதன்மை ஆணையர் பி.செல்வ கணேஷ் கலந்து கொண்டு சமுதாயத்திற்கான சேவை யின் முக்கியத்துவம் மற்றும் நாட்டைக் கட்டியெழுப்பு வதில் வருமான வரியின் பங்கு குறித்து பேசினார். கவுரவ விருந்தினரான ரோட்டரி மாவட்ட கவர்னர் என். எஸ். சரவணன் பேசுகையில்:-  தேர்ந்தெடுக்கப்பட்ட ரோட் டரியின் பங்கு குறித்தும், உலகில் நம்பிக்கையை உருவாக்குவதில் நெக்ஸ்ட் ஜென் எவ்வாறு முக்கியப் பங்காற்ற முடியும் என்பது குறித்தும் பேசினார்.

இந்நிகழ்வில் ஜென் 11ஆவது தலைவராக பதவி ஏற்ற அபிசேக் முரளி கூறுகையில்;- மேலும் இந்த ஆண் டிற்கான தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டினார், இதில் பின்தங்கிய பள்ளிகளுக்கு 20க்கும் மேற்பட்ட நூலகங்கள் கட்டுதல், தொழிலாளர்களுக்கு சேமிப்பு மற்றும் முதலீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிதி முகாம் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்தல் உள் ளிட்ட பல்வேறு செயல் திட்டங்கள் குறித்தும் பேசினார். செயலாளர் யஷ்வர்தன் பல்சானி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் நெக்ஸ்ட் ஜென் உறுப்பினர்கள் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.


No comments:

Post a Comment