கேள்வி: ஆசை இல்லாத வாழ்க்கையை ஹிந்துமதம் போதிப்பது ஏன்?
பதில்: மண்ணாசை வந்து விட்டால் கொலை விழுகிறது. பொன்னாசை வந்து விட்டால் களவு நடக்கிறது. பெண்ணாசை வந்து விட்டால் பாவம் நிகழ்கிறது.
இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான் ஆசை இல்லாத வாழ்க்கையை ஹிந்து மதம் போதிக்கிறது.
- ஆர்.எஸ்.எஸ். வார இதழ் 'விஜயபாரதம்'
அட அண்டப்புளுகே ஆகாசமே! முதலில் மனிதர்கள் ஆசை பற்றிப் பேசுவது ஒருபுறம் இருக்கட்டும்.
அண்டத்தையே படைத்து அனைத்துயிர்களையும் காப்பதாகக் கதை அளக்கிறீர்களே, நீங்கள் கூறும் அந்தக் கடவுள்கள் ஆசையை அறுத்தவர்களா?
பெற்ற மகள் சரஸ்வதியையே பெண்டாண்ட பிர்மாதானே உங்களின் படைத்த கடவுள்.
காத்தல் கடவுள் என்று உங்கள் ஹிந்து மதத்தில் ஒரு கடவுளை வைத்துள்ளீர்களே, அந்த விஷ்ணு, ஜலந்திரனைக் கொன்று அவனுடலில் பிரவேசித்துக் கொண்டு, அவன் மனைவியைக் கற்பழிக்கவில்லையா?
உங்களது மூன்றாவது கடவுள் - அதுதான் அழித்தல் தொழிலைச் செய்யும் சிவன், தாருகாவனத்து ரிஷிப் பெண்களைக் கற்பழித்ததால் சாபத்திற்கு ஆளாகி சிவனின் சிசுனம் அறுந்து விழுந்தது. அதுதான் சிவலிங்கம் என்று வழிபடுகிறீர்களே!
எடுத்துச் சொல்லப் போனால் வண்டி வண்டியாகக் குவிந்து தொலைக்குமே!
படைத்தல், காத்தல், அழித்தல் கடவுள் என்று முத் தொழில்களைச் செய்வதாக நீங்கள் கூறும் மும்மூர்த்திகள் பெண்ணாசையைத் துறந்தவர்கள் இல்லை என்பதற்கு மேலே எடுத்துக் காட்டப்பட்ட (எல்லாம் உங்கள் புராண ஆதாரங்கள் தான்) கேவலமான நிகழ்வுகளிலிருந்து என்ன தெரிகிறது?
ஆசை இல்லாத வாழ்க்கையை ஹிந்து மதம் போதிக் கிறது என்று கூறும் ஆர்.எஸ்.எஸ். வார ஏடான 'விஜய பாரதமே' - இதற்கெல்லாம் பதிலை அடுத்த இதழில் எதிர்பார்க்கலாமா?
No comments:
Post a Comment