திருச்சி, ஜூன் 1 - பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறை பேராசிரியர் முனைவர் இரா.இராஜகோபாலன் தொடர்ந்து ஆராய்ச்சிப் பணி களில் ஈடுபட்டு தேசிய மற்றும் பன்னாட்டு ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக்கட்டுரைகளை சமர்ப்பித்து பல பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்று வருகிறார். அதுமட்டுமல் லாது மருந்தியல் ஆராய்ச்சியில் குறுகிய காலங்களில் 6 காப்புரி மைகளை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்ப்பதுடன் 2022ஆம் ஆண்டிற்கான டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.
விருது பெற்ற முனைவர் இரா.இராஜகோபாலனை பெரியார் மருந்தியல் கல்லூரியின் ஆலோசகர் வீ. அன்புராஜ் 31.5.2023 அன்று பாராட்டி சிறப்பு செய்து தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் இதனை முன்னெடுத்துச் செயல் படுத்திய பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை உள்ளிட்ட பேராசிரிய பெருமக்கள் அனைவருக்கும் தமது பாராட்டுக் களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து, மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்து, அவர்கள் சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் ஆராய்ச் சியில் முனைப்பாக செயல்பட பேராசிரியர்கள் உறுதுணையாக திகழ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் மருந்தியல் துறை யில் அதிகப்படியான ஆய்வுகள் நடைபெறவேண்டும் என்ற நிறு வனத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுத லுக்கிணங்க பெரியார் மருந்தியல் கல்லூரி தொடாந்து பல ஆய்வு களை மேற் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment