பக்தியால் விபரீதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 29, 2023

பக்தியால் விபரீதம்!

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இஸ்கான் அமைப்பினர் ஏற்பாடு செய்த ரத யாத்திரை 

மின்சாரம் பாய்ந்து 7 பேர் பலி; 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம்

அகர்தலா, ஜூன் 29 திரிபுராவின் உனகோடி மாவட்டத்தில் நேற்று (28.6.2023) நடைபெற்ற ஜகந்நாதர் தேர் உற்சவத்தின்போது ஏற்பட்ட விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மற்றும் 15 பேர் காயமடைந்தனர். ஊர்வலமாகச் சென்றுக் கொண்டிருந்த தேர், உயர் அழுத்த கம்பியில் சிக்கியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

இஸ்கான் ஏற்பாடு செய்த 'உல்டா ரத் யாத்ரா' அல்லது ரதம் திரும்பும் விழாவின் போது குமார்காட் பகுதியில் மாலை 4.30 மணி யளவில் இந்த சோக விபத்து நடைபெற்றது. 

திரிபுராவில் உல்டா ரத யாத்திரையின் போது என்ன நடந்தது?

இரும்பினால் செய்யப்பட்டு நன்கு அலங் கரிக்கப்பட்ட தேரை ஆயிரக்கணக்கான மக்கள் வடம் பிடித்து  இழுத்துச் சென்று கொண்டிருந்தனர். தெருவில் சென்று கொண் டிருந்த  தேரின்மீது, 133 ரிக்ஷி அழுத்தம் கொண்ட மேல்நிலை கேபிள் உரசியது. அப்போது தேரின் சில பகுதிகள் தீப்பிடித்தன.

எரிந்த தேரில் இருந்தவர்கள் உடலில் தீப் பிடித்து சாலையில் விழுந்தனர். தீயணைப்புத் துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று, நிலை மையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 6 பேர் நிகழ்விடத்திலேயே இறந்தனர். 15 பேர் தீக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தேர் தீப்பிடித்ததில் உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும், மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக காவல்துறை உதவி ஆய்வாளர் தாஸ் சவுத்ரி தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் மாவட்டத்தில் உள்ள கைலாஷாஹர் மற்றும் குமார்காட் மருத்துவ மனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர், பின்னர் அவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அகர்தலாவில் உள்ள ஜிபி பண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் தெரி வித்தார்.

திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா, குமார்காட்டுக்கு ரயிலில் சென்று காய மடைந்தவர்களை சந்தித்தார். 

"குமார்காட்டில் நடந்த ஒரு சோகமான விபத்தில், 'உல்டா ரத்' இழுக்கும்போது மின் சாரம் தாக்கியதில் பல பக்தர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்நிகழ்வால் நான் மிகவும் வருந்துகிறேன். உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கி றேன். காயமடைந்தவர்கள் விரைவில் குண மடைய, இந்த இக்கட்டான நேரத்தில் மாநில அரசு அவர்களுக்கு துணை நிற்கிறது" என்று சாஹா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் போது முதலமைச்சர் சாஹா, இறந்தவரின் உறவினர் களுக்கு உடனடியாக ரூ. 4 லட்சம் இழப்பீடு அறிவித்தார், அதே நேரத்தில் 60% க்கும் அதிகமான தீக்காயங்கள் உள்ள நபர்களுக்கு ரூ.2.50 லட்சம் வழங்கப்படும் என்றும், 40 முதல் 60 சதவீதம் வரை தீக்காயம் அடைந்த வர்களுக்கு ரூ.74,000 வழங்கப்படும் எனவும் திரிபுரா முதலமைச்சர் தெரிவித்தார்.

மாநில அமைச்சர் டிங்கு ராய் உடன் சாஹா குமார்காட் மருத்துவமனைக்குச் சென்று மக்களின் நலம் குறித்து விசாரித்தார், விபத்தில் சிக்கிய அனைவருக்கும், அனைத்து உதவிகளும் செய்வதாக உறுதியளித்தார்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு திரிபுரா மாநில மின்சார கழகத்திற்கு உத்தர விட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்துள்ளார். விபத்துக்கு காரணமான தவறுகளுக்குப் பின்னால் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அனிமேஷ் டெபர்மா கோரினார்.

"உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனக்குறை வால் இந்த சோக சம்பவம் நடந்ததாக தெரிகிறது," என்று அவர் குற்றம் சாட்டினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில காங்கிரஸ் மற்றும் சிபிஅய்(எம்) கட்சிகளும் இரங்கல் தெரிவித்தன. 

No comments:

Post a Comment