புதுடில்லி, ஜூன் 11- தகுதி வாய்ந்த வெளிநாடுவாழ் இந்தியர் கள், இணையவழியில் ஓட்டளிக் கும் வசதியை கொண்டு வருவதற் கான நேரம் வந்து விட்டது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறினார். டில்லியில் 2022ஆம் ஆண்டு பிரிவில், இந்திய வெளிநாடு பணி அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெறு பவர்களிடையே தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேசினார்.
‘இந்தியா-ஜனநாயகங்களின் தாய் மற்றும் தேர்தல் ஆணையத் தின் பங்கு’ என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:- இந்திய தேர்தல்கள், உலகின் மிகப்பெரிய அமைதிகால நகர்வாக பாராட்டப்படுகிறது. தேர்தல் பணியாளர்களையும், தேர்தலுக்கான பொருட்களையும் அந்த அளவுக்கு சிறப்பாக கொண்டு சேர்த்து வருகிறோம். ஜனநாயகத்துக்கு பின்னடைவு ஏற்பட்டதாக உலக அளவில் கவலை அதிகரித்து வருகிறது.
அதே சமயத்தில், 1952ஆம் ஆண்டில் இருந்து இந்தியா வெற்றிகரமாக நடத்தி வரும் தேர் தல்கள், இந்தியாவின் தேசிய வலி மைக்கு உதாரணமாக பார்க்கப் படுகிறது. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள், நேர்மை யான தேர்தல் நடத்துவதற்கு சவாலாக உள்ளன.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி, வெளிநாடுகளில் வசிக்கும் மொத்த இந்திய வாக் காளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரம் ஆகும். இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில், தகுதி யுள்ள வெளிநாடுவாழ் இந்தி யர்கள் தொழில்நுட்பத்தை பயன் படுத்தி பங்கேற்க வாய்ப்பு வழங்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
அவர்களுக்கு இணையவழியில் ஓட்டு போடும் வசதியை அளிக் கலாம் என்று தேர்தல் ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.
அதை அமல்படுத்துவதில் உள்ள சவால்களை களைவது பற்றி ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment