இந்து நாளிதழில் பதவி விலகிய மாலினி பார்த்த சாரதி, இந்துவில் தனது கொள்கைக்கு இடமில்லை ஆகையால் பதவி விலகுகிறேன் என்று கூறி வெளியேறியுள்ளார்.
இந்து நாளிதழில் 75 ஆண்டுகளுக்கு முன்பு வந்த செங்கோல் தொடர்பான செய்தியையே மறைத்து 'செங்கோல்' குறித்து கற்பனைக் கதையை பாஜக கூற அப்படியே 'தி இந்து' ஆங்கில நாளிதழில் அதன் "ஆசிரியர் தலைமைப் பதவி" வகித்த மாலினி பார்த்தசாரதி வெளியிட்டார்.
உண்மைக்குப் புறம்பான இந்த செய்தி குறித்து 'தி ஆல்ட்' என்ற இணைய இதழ் இந்து தலைமைக்கு சுட்டிக்காட்டியது. மேலும் அன்றைய (15.08.1947) 'தி இந்து' நாளிதழில் (பழைய இதழ்) வெளிவந்த செய்தியையும் அது படத்தோடு வெளியிட்டது, இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. ஒன்றிய அரசே உண்மைக்குப் புறம்பான செய்தியை மக்களிடையே பரப்புகிறது - அதை முன்பு உண்மைச் செய்தியை வெளியிட்ட 'தி இந்து' நாளிதழ் எந்த ஒரு முன்யோசனையும் இன்றி, அக்கதையை வெளியிடுகிறது என்ற விமர்சனம் பரவியது. 'இந்து' நாளிதழின் நம்பகத்தன்மையை பெரும் கேள்விக்குள்ளாக்கியது.
பின்னர் இது தொடர்பாக 'இந்து' ராம் அவர்கள் தானே முன்வந்து விளக்கம் அளித்தார். அதன் பிறகு இந்து நாளிதழில் அன்றைய செய்தி படத்துடன் வெளியானது. அதில் பல்வேறு பரிசுப்பொருட்களைப் போல் தமிழ்நாட்டில் இருந்து ரயிலில் சென்று அன்றைய பிரமதராக தேர்வு செய்யப்படவிருந்த ஜவஹர்லால் நேருவை அவரது இல்லத்தில் வைத்து ஆதினம் கொடுத்தது தான் அந்த செங்கோல். செங்கோலுக்கும் ஆட்சி மாற்றத்திற்கும் ராஜாஜிக்கும் மவுண்ட்பேட்டனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்ற உண்மை வெளியானது.
ஆனால், உண்மைக்கு மாறாக மேடைக்கு மேடை கூறி வந்த அமித்ஷா, நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு ஆளுநர் உள்ளிட்ட யாருமே குட்டு வெளிப்பட்ட பிறகு ஓட்டுக்குள் புகுந்த ஆமைபோல் பதுங்கி விட்டனர்.
My term as Chairperson of The Hindu Group Publishing ends. However, I have also resigned from the Board of the THGPPL as I find the space and scope for my editorial views shrinking.
My entire endeavour as Chairperson and Director, Editorial Strategy was to ensure that The Hindu Group revives its legacy of fair and unbiased reporting.
Also my efforts were to free our narrative from entrenched ideological bias. Since I find the scope for my efforts has narrowed, I have decided to move on. I thank all my well-wishers and friends who have supported this challenging journey.
இந்த நிலையில், பெரும் நெருக்கடிக்குள்ளான 'இந்து' நாளிதழ் அதன் பொறுப்பாசிரியராக இருந்த மாலினி பார்த்தசாரதியை பதவியில் இருந்து விலகக் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனால் 'இந்து' நிர்வாகத்தின் தலைமைப் பதவியில் இருந்து மாலினி பார்த்தசாரதி பதவி விலகி உள்ளார். அவர் தனது பதவி விலகல் தொடர்பாக ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் "எனக்கான பரந்துவிரிந்த சிந்தனைக்கு இங்கு இடமில்லை என்று தோன்றுகிறது. நான் இதுநாள் வரை சுதந்திரமாக பணியாற்றினேன். தற்போது எனது கருத்தியலுக்கு இங்கே இடமில்லை, எனக்கான இடம் தேடி எனது பயணம் தொடர்கிறது. அனைவரும் தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்" என்று கூறியுள்ளார்!
இந்த அம்மையார் 'இந்து' ஆங்கில ஏட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்த நாள் முதல் திராவிடர் கழகம் என்ற சொல்லோ அதன் தலைவர் வீரமணி அவர்களின் பெயரோ 'இந்து' ஏட்டில் வெளி வராது. இவருக்கு முன்பு இப்படி எல்லாம் இருந்ததில்லை. அந்தப் பெயர்களால் 'இந்து' ஏட்டுக்கு 'தோஷம்' ஏற்பட்டு விடும் என்ற எண்ணம்.
"கெடுவான் கேடு நினைப்பான்" என்பார்கள். அந்த அம்மையாரைப் பொறுத்தவரை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
'வெறுப்பு' அரசியலைப்பற்றி இவரைப் போன்ற வர்களிடம் தெரிந்து கொள்ளலாம்.
'தி இந்து' ஆங்கில ஏடு தமிழிலும் 'இந்து தமிழ் திசை' என்ற ஓர் ஏட்டைத் தொடங்கியது. தொடக்கத் தில், தமிழ் உணர்வு சார்ந்து நடைபோட்ட இந்த ஏடு இப்பொழுதெல்லாம் 'தினமலர்' போல பிஜேபி ஏடாகவே மாறியுள்ளது அம்பலமாகி வருகிறது.
- கலி. பூங்குன்றன்
பொறுப்பாசிரியர்
விடுதலை
No comments:
Post a Comment