திருவாரூர், ஜூன் 5- திருவாரூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம், கடந்த 27.05.2023 மாலை 5.00 மணியளவில், மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட தலை வர் வி.மோகன் தலைமையிலும், தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, காப்பாளர் கி.முருகையன், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் க.வீரையன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ் ஆகியோர் முன் னிலையிலும் நடைபெற்றது. கூட் டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1. ஈரோட்டில் 13.05.2023 அன்று நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுக்கூட்டத்தின் அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றுவது என முடிவு செய் யப்படுகிறது. இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர, ஒன்றியங்களில் கலந்துரை யாடல் கூட்டங்களை கீழ்க்கண்ட வாறு நடத்தி செயல்திட்டங்கள் வகுத்திட முடிவு செய்யப்படுகிறது. 02.06.2023 அன்று - திருவாரூர் நகரம், 05.06.2023 அன்று- திருவா ரூர் ஒன்றியம், 07.06.2023 அன்று- குடவாசல் ஒன்றியம், 09.06.2023 அன்று- கொரடாச்சேரி ஒன்றி யம், 11.06.2023 அன்று- நன்னிலம் ஒன்றியம், 12.06.2023 அன்று- திருத்துறைபூண்டி நகரம், ஒன்றியம்.
2.கலைஞர் நூற்றாண்டு விழா, வைக்கம் நூற்றாண்டு விழா ஆகிய வற்றை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர, ஒன்றியங் களிலும் பிரச்சாரக்கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்படு கிறது.
3. தமிழர்களின் பேராயுதமான விடுதலை நாளிதழுக்கு பெருமள வில் சந்தாக்கள் சேர்த்து அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
4. திருவாரூர் மாவட்டத்திற்கு தலைமைக் கழகம் அறிவித்தபடி பயிற்சி முகாமினை சிறப்பான முறையில் நடத்துவது எனவும், இதில் நிறைய மாணவர்கள் மற்றும் இயக்கத்திற்கு அப்பாற் பட்ட பெரியாரிய உணர்வாளர் களை பங்கேற்க செய்வது எனவும் முடிவு செய்யப்படுகிறது.
கூட்டத்தில் மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.சிவக்குமார், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, கோ.செந்தமிழ் செல்வி, மாவட்ட விவசாய தொழி லாளரணி தலைவர் பி.ரெத்தின சாமி, மாவட்ட அமைப்பாளர் ச.பொன்முடி, மாவட்ட துணை செயலாளர் கோ.இராமலிங்கம், மாவட்ட ப.க தலைவர் அரங்க.ஈவெரா, நகர தலைவர் சவு.சுரேஷ், நகர செயலாளர் பி.ஆறுமுகம், நகர அமைப்பாளர் கே.சிவராமன், மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, மாவட்ட மாணவர் கழக தலைவர் கே.அழகேசன், நன்னிலம் ஒன்றிய ப.க தலைவர் எஸ்.கரிகாலன், ஒன்றியத் தலைவர்கள் என்.ஜெயராமன், சு.சித்தார்த்தன், ஒன்றிய செயலா ளர்கள் ஆர்.தன்ராஜ், சி.அம்பேத் கர் மற்றும் நகர, ஒன்றிய, கிளைக் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment