ஒன்றியந்தோறும் தெருமுனை பரப்புரை, ஊர் தோறும் கிளைக் கழகங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 1, 2023

ஒன்றியந்தோறும் தெருமுனை பரப்புரை, ஊர் தோறும் கிளைக் கழகங்கள்!

காரைக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு!

காரைக்குடி, ஜூன் 1 மாவட்ட கழக கலந்துரையாடல்கூட்டம்  29.05.23 திங்கள் பகல் 12 மணி அளவில் காரைக் குடி  குறள் அரங்கில்  மாவட்டத் தலை வர் ச.அரங்கசாமி தலைமையில் நடை பெற்றது. 

தலைமைக் கழக அமைப்பாளர் 

கே. எம். சிகாமணி. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் 

வே. ராஜவேல், மாவட்ட கழக செய லாளர் வைகறை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் கொ. மணிவண்ணன், கழக காப்பாளர் சாமி.திராவிடமணி, கழகப் பேச்சாளர் தி. என்னாரசு பிராட்லா, தேவகோட்டை நகர தலைவர் வீ. முரு கப்பன், மாவட்ட ப.க. தலைவர் சு. முழு மதி, சிவ.தில்லை ராஜா, மாவட்ட அமைப்பாளர் சி. செல்வமணி ஆகி யோர் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்: 

ஈரோடு பொதுக்குழு தீர்மானங் களை செயலாக்கம் செய்வதெனவும், குற்றாலம் பயிற்சி முகாமிற்கு மாணவர் களை அனுப்புவதெனவும், காரைக்குடி மாவட்டத்தில் பயிற்சிப் பட்டறை நடத் துவது எனவும், ஊர்தோறும் கிளைக் கழகங்கள் அமைப்பதெனவும், தெரு முனை பரப்புரைகள் ஒன்றியம் தோறும் நடத்துவததெனவும் தீர்மானிக்கப் பட்டது.


No comments:

Post a Comment