திருநெல்வேலி மாவட்டத்தில் எழுச்சி! புதிய உறுப்பினர்கள் சேர்க்கும்பணி-மாணவர்கள் கழகத்தில் இணைந்தனர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 11, 2023

திருநெல்வேலி மாவட்டத்தில் எழுச்சி! புதிய உறுப்பினர்கள் சேர்க்கும்பணி-மாணவர்கள் கழகத்தில் இணைந்தனர்!

நெல்லை, ஜூன் 11-  நெல்லை மாவட்டத்தில் 30.5.2023 அன்று காலை 7.30 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணிக்கு கிளைக் கழகம் தோறும் நேரில் சந்திக்கும் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றது.

மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமை யில், மாவட்ட கழகச் செயலாளர் இரா.வேல்முருகன், காப்பாளர் இரா.காசி , திராவிட இயக்க தமிழர் பேரவை பொறுப்பாளர் பேராசிரியர் நீல கிருஷ்ணா பாபு ஆகியோர் முன்னிலையில்  முனைவர் கி.சவுந்தர்ராசன்  மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் ஆகியோர் தென்கலம் கிராமத்திற்குச் சென் றார்கள் வாசு.அய்யப்பன், க.பரமசிவன், பேராசிரியர் ராஜ்குமார், கு.வெள்ளைத்துரை ஆகியோர் வரவேற்று சிறப்பித்தனர்.

புதிய கழகக் கொடி ஏற்றுவது என்றும், விரைவில் தென்கலத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா  தெருமுனைக் கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது . 

கு.வெள்ளத்துரை இல்லத்தில் மாவட்ட பொறுப் பாளர்களுக்கு பயனாடை அணிவித்து பாராட்டி மகிழ்ந்தார்கள் .

அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டையில் பேராசிரியர் வே.மாணிக்கம் இல்லத்திற்குச் சென்ற பொறுப்பாளர்களை அன்பொழுக வரவேற்று தமிழர் தலைவர் அவர்களின் அரும் பணியினை எடுத்துக்காட்டி, அவருடைய தொண்டுக்கு நாம் துணை நிற்போம் எனக் கூறி மகிழ்ந்தார். அந்நிகழ்வில் யசோதா மகளிர் விடுதி பொறுப்பாளர், விடுதலை வாசகர் பொறியாளர் இரா. முத்துக்குமார் பங்கேற்றார். 

அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி டி.வி.சுந்தரம் நகரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடி குமாரசுப்பிரமணியம், தமிழ் மனையில் சந்திப்பு நடைபெற்றது. அவரது மகன்கள் சு. நச்சினார்க்கினியன், மாவட்ட ப.க. செயலாளர் சு. திருமாவளவன் ஆகியோர் சிறப்பாக வரவேற்றனர் .

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அளப்பரிய தொண்டினை நினைவு கூர்ந்து தாம் எழுதிய கவிதை நூலை ஆசிரியர் அய்யாவிடம் கொடுக்கக் கூறி குமாரசுப்பிரமணியம் வழங்கினார் .

அதனைத் தொடர்ந்து பத்தமடையில் 97 அகவை நிரம்பிய திராவிட முன்னேற்றக் கழக மூத்த முன்னோடி பத்தமடை ந.பரமசிவம் இல்லத்தில் சந்திப்பு நடை பெற்றது.

சேரன்மாதேவியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் சிலையை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தையும், நமது தமிழர் தலைவர் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தையும் பத்த மடை பரமசிவம் வழங்கினார். கழகத்தின் சார்பில் அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது. 

தமிழர் தலைவரோடு தொலைப்பேசியில் உற்சாகமாக பேசினார்.

அவர்களுடன் மாவட்ட பிரதிநிதி பத்தமடை பா. ராஜேந்திரன் வழக்குரைஞர் மா.சுவாமிநாதன், மா.சூரியன், காருகுறிச்சி செல்லமுத்துசேகர், கருவை செ.சந்திரசேகரன்  ஆகியோர் பங்கெடுத்து அனை வரையும் வரவேற்றனர்.

தொடர்ந்து வள்ளியூரில் நகர கழக செயலாளர் இரமேசு இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் பகுத்தறி வாளர் கழக நகரத்தலைவர் த.குணசீலன், பகுத்தறிவாளர் கழக நகர துணைத் தலைவர்    அ.மு.சத்யம், நகர ப.க. துணைச் செயலாளர் இ.மோகனசுந்தர் ஆகியோருடனும், நகர கழக செயலாளர் பழ வணிகர் நம்பிராசன் அவர்களுடனும் நடைபெற்ற சந்திப்பில் விரைவில் வள்ளியூரில் பகுத்தறிவாளர் கழக தொடக்கவிழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

வள்ளியூர் நகர பகுத்தறிவாளர் கழக 

புதிய பொறுப்பாளர்கள்

தலைவர்-ந.குணசீலன் 

துணைத் தலைவர் -அ.மு.சத்யன் 

செயலாளர் -சு.வெள்ளைப்பாண்டி

துணைச் செயலாளர்-இ.மோகனசுந்தர்,

நகர திராவி டர் கழக புதிய பொறுப்பாளர்கள்: 

தலைவர் -செ.இரமேசு;  செயலாளர் பெ.நம்பிராசன் புதிய பொறுப்பாளர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.

அதனைத் தொடர்ந்து வீரவநல்லூர் நகர கழகத்தின் தலைவர் மா.கருணாநிதி - ஆனந்த செல்வி இல்லத்தில் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது 

‘விடுதலை', ‘உண்மை' இதழ்களுக்கு சந்தா திரட்ட வும், வீரவநல்லூரில் விரைவில் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது 

தொடர்ந்து பெரியாரியலாளர் பெரியார் பித்தன் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பு கூட்டத்தில் நகர கழக செயலாளர் மு.தமிழ்ச்செல்வன் பங்கேற்று புதிய இளை ஞர்கள் மாணவர்களை கழகத்தில் கொண்டு வருவோம் எனவும், விரைவில் கழகக்  கொடி ஏற்றப்படும் என்றும் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு அயன் சிங்கப் பட்டியில் புதிய இளைஞர்கள் மாணவர்களுடன் சந்திப்பு. பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியாரின் கொள்கையினை ஏற்று தமிழர் தலைவர் தலைமையில் இளைஞர்கள், மாணவர்கள் இணைந்து செயலாற்ற வரவேண்டுமென கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கேட்டுக்கொண்டார்.

உடனே எஸ்.சுனில்குமார், எஸ்.பிரசாத், மு.இசைப்பிரியன் ஆகியோர் திராவிட மாணவர் கழகத்தில் தம்மை இணைத்துக் கொள்வதாக அறிவித்தார்கள்.

ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட எஸ்.பிர பாகரன் -சத்தியா ருக்மணி, இணையருக்கு மாவட்டக் கழகம் சார்பில் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பி. மகாராஜன், ஆர்.சண்முகசுந்தரம், எஸ்.குமார், சி.குமாரசாமி, வீரவநல்லூர் கிளைக் கழகத் தலைவர் மா.கருணாநிதி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்து தந்த வீரவநல்லூர் கழகச் செயலாளர் மு.தமிழ்ச்செல்வனுக்கு நன்றி தெரி விக்கப்பட்டு அடுத்தடுத்த கிராமங்களிலும் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்த கேட்டுக்கொள்ளப்பட்டது.

குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி முகாமில் அனைவரும் பங்கேற்பது என முடிவு செய் யப்பட்டது.

No comments:

Post a Comment