சிவகங்கை, ஜூன் - 2- 29.5.2023 அன்று சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் இரா. புகழேந்தி தலைமையில் நடந்தது கூட்டத்தில் கழகத்தின் சார்பில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கழக மாநில இளைஞ ரனி துணை செயலாளர் ராஜவேல் கலந்து கொண் டார். மற்றும் கழக காப் பாளர் அண்ணன் சா. இன்பலாதன், மாவட்ட செயலாளர் ராஜாராம் பாண்டியன் மற்றும் கழக தோழர்களும் கழக மகளிர் அணியினரும் கலந்து கொண்டனர்.
சிவகங்கை, ராமநாத புரம், காரைக்குடி மாவட்ட தலைவர் செயலாளர் அவர்களுக்கு ‘‘குற்றாலத் தில் நடைபெறும் ஜூன் 28 29 30 ஜூலை 1ம் தேதி களில் பயிற்சி பட்டறை நடைபெற இருக்கின்றது
எஎனவே ஒவ்வொரு மாவட் டத்திலும் குறைந்தது 10 மாணவர், மகளிர், இளை ஞர்களை திரட்டி குற்றா லம் பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'' என்று தலைமை கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி வேண்டுகோள் விடுத்தார்.
தீர்மானம்
1) ஈரோடு பொதுக் குழு தீர்மானத்தின் படி, சிவகங்கை மாவட்டம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது.
2) கிளைக் கழகங்கள் முழுவதும் கழகக் கொடி ஏற்றி, புதிய உறுப்பினர் களை சேர்ப்பது.
3) விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, ஆகிய கழக பகுத்தறிவு ஏடுகளை மக்களிடையே பரப்பு வது,
4) சிவகங்கை கல்லூரி சாலைக்கு, " கவிஞர் மீரா சாலை" எனப் பெயரிட ஆணை பிறப்பித்த சிவ கங்கை நகர்மன்ற தலை வர் சி.வி.துரை ஆனந்தை யும், நகர் மன்ற துணை தலைவர் வழக்குரைஞர் கார் கண்ணனையும், சிவ கங்கை மாவட்ட கழக சார்பாக எனது நன்றி களையும், பாராட்டு களையும் தெரிவித்துக் கொள்கிறது.
5) சிவகங்கை நகரத் தில் தந்தை பெரியார் சிலை அமைக்க வேண்டி சிவகங்கை நகர்மன்ற தலைவர்களை கேட்டுக் கொள்வது.
6) அகில இந்திய அள வில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி நம் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த மன்னர் துரைசிங்கம் அரசு கலை கல்லூரியின் மேனாள் உடற்கல்வி இயக்குனர் வேலாயுதம் பெயரை சிவகங்கை விளையாட்டு அரங்கத்திற்கு சூட்ட நகர் மன்ற தலைவரை கேட்டுக் கொள்வதென்று தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.
No comments:
Post a Comment