தஞ்சாவூர், ஜூன்24 - தமிழக ஆளுநரின் கருத்து வள்ளலாரை இழிவுபடுத்துவதாகும். அவர் தன்னுடைய போக்கை கைவிடாவிட் டால், அவரை எதிர்த்து மிகப் பெரிய இயக்கம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கணபதி நகரில் நேற்று (23.6.2023) கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிக்கு 90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த பணி களை முதலமைச்சர் நேரில் பார்வை யிட்டுச் சென்றுள்ளார். தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது.
கருநாடக அரசிடமிருந்து நமக்கு வரவேண்டிய தண்ணீரை, தமிழ்நாடு அரசு கேட்டுப் பெற வேண்டும். நீர் மேலாண்மையைக் கடைப்பிடித்து, குறுவை சாகு படியை உத்தரவாதப்படுத்த வேண்டும். வள்ளலார் குறித்து தமிழ்நாடு ஆளுநர் கூறிய கருத்து, வள்ளலாரை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. சனாதனம், மத வெறி, ஜாதி பேதம் போன்றவற்றை கடுமையாக எதிர்த்தவர் வள்ளலார். இந்நிலையில், சனா தனத்தின் உச்சம் வள்ளலார் எனக் கூறி, அவர் மீது காவியைப் போர்த்தியுள்ளார் ஆளுநர். இது கடுமையாக கண்டிக்கத் தக்கது.
இதேபோல இந்தியாவை பற்றி காரல் மார்க்ஸ் தவறாக பேசியிருப்பதாக ஆளுநர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்கள், நிறை வேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன. இத்தகைய போக்கை ஆளுநர் உடனே நிறுத்த வேண்டும். இல்லை யெனில் ஆளுநர் ரவியை எதிர்த்து மிகப்பெரிய இயக்கம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கில், எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட்டு வருகின்றன. 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மிகப் பெரிய தோல்வியைத் தழுவவுள்ளது.
உயர்மட்டக்குழு விசாரணை அவசியம்
அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறையில் ரூ.122 கோடி முறைகேடு நடந்துள்ள தாக அறப்போர் இயக்கம் தகவல் சேகரித்து, கூட்டுறவுத் துறை அமைச்சரிடம் வழங்கி யுள்ளது. இந்த மிகப்பெரிய முறைகேடு குறித்து தமிழ்நாடு அரசு உயர்மட்டக்குழு அமைத்து, புகாரின் மீது விசாரணை நடத்தி உரிய நட வடிக்கையை எடுக்க வேண்டும்.
தற்போது, 500 மதுக்கடைகளை தமிழ்நாடு அரசு மூடியிருப்பதை வரவேற்கி றோம். இதேபோல படிப்படியாக அனைத்து மதுக்கடைகளையும் மூட நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களையும் முற்றிலு மாக ஒழிக்க வேண்டும்.
குறுவை சாகுபடிக்கு கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் மட்டு மல்லாமல், தேவையான அளவுக்கு பயிர்க்கடனும் வழங்க வேண்டும். நிகழாண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீட்டையும் அமல்படுத்த வேண்டும். இத்திட்டத்தைத் தனியார் நிறுவனங்கள் செயல்படுத்த முன் வராவிட்டால், தமிழ்நாடு அரசே அதை ஏற்று நடத்த வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment