மங்களூரு, ஜூன் 7 - மதக் கலவரங்களை தூண்டும் விதமாக வதந்தி பரப்புபவர்கள் மீது அது யாராக இருந்தாலும் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என கருநாடக அமைச்சர் பரமேஸ்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் மேற்கு மண்டல காவல் அலுவலகத்தில் அமைச் சர் பரமேஸ்வர் காவல் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதில் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் அலோக்குமார், மேற்கு மண்டல் காவல்துறை தலைவர் சந்திரகுப்தா, மங்களூரு காவல்துறை ஆணையர் குல்தீப் குமார் ஜெயின், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரிஷ்யந்த் (தட்சிண கன்னடா), விஷ்ணுவர்தன் (உத்தர கன்னடா), அக்ஷய் (உடுப்பி), உமா பிரசாத் (சிக்கமகளூரு) ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் ஜி.பரமேஸ்வர் கூறியதாவது:-
வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு மங்களூருவுக்கு வருவதில்லை. காரணம் மங்களூருவில் எப்போதும் நிலுவும் பதற்றமான சூழ்நிலை தான். இங்கு அமைதியும், மத நல்லிணக்கமும் இல்லை. மாவட்டம் முழு வதும் மத கலவரங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதனை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்க ளூரு பகுதியில் நடந்த குற்றச்சம்பவங்கள் பற்றி உரிய விசாரணை நடத்த காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகஸ்டு 15-ஆம் தேதிக்குள் கடலோரப் பகுதியை போதைப்பொருள் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும். மங்களூருவில் அமைதியையும், நல்லி ணக்கத்தையும் காப்பாற்ற நாம் கைகோர்க்க வேண் டும். மத நல்லிணக்கத் திற்காக நான் நடைப் பயணம் சென்றுள்ளேன்.
கடலோரப் பகுதி களில் பதற்றமான சூழ் நிலை ஏற்படுவதாக மக்கள் கூறுகிறார்கள். அந்த நிலைமையை காவல் அதிகாரிகள் மாற்ற வேண் டும். மதநல்லிணக்கத்தை காக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் அவர்களுக்கு உத வியாக இருக்கும் காவ லர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். என்று அமைச்சர் பர மேஸ்வர் கூறினார்.
கடற்கரையோர மாவட்டம், உடுப்பி, தெட் சின கருநாடகா உள்ளிட்ட மாவட்டங் களில் கடந்த 4 ஆண்டுகளாக ஹிந்து அமைப்பினரின் கொட்டம் அதிகரித்து அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. ஹிந்து அமைப்பினரின் அடாவ டித்தனத்தால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் கருநாடக கடற்கரை மாவட்டங்களில் கிட்டத் தட்ட வெளிநாட்டு மற் றும் வெளிமாநில சுற்று லாப்பயணிகள் வருவது நின்றுபோனது, அவர்கள் அனைவரும் தமிழ்நாடு கேரளா மற்றும் கோவா கடற் கரையை தேர்ந் தெடுக் கின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் மதக் கலவரத்தை தூண்டும் நபர்கள் மீது புதிய அரசு கடுமையான நட வடிக்கை எடுப்பதாக உறுதி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment