திருவையாறு ஒன்றியம், வளப்பக்குடியில் "வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் " விளக்க தெருமுனைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 10, 2023

திருவையாறு ஒன்றியம், வளப்பக்குடியில் "வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் " விளக்க தெருமுனைக் கூட்டம்

வளப்பக்குடி, ஜூன் 10- வளப்பக் குடி மந்தைத் திடலில் திராவிடர்  கழகத்தின் சார்பில் வைக்கம் நூற் றாண்டு விழா - திராவிட மாடல் விளக்கத் தெரு முனைக் கூட்டம்  4.6.2023 ஞாயிறு மாலை 6 மணிக்கு மாவட்ட தி.க.விவசாயணி தலைவர் இரா.பாலசுப் பிரமணியன் தலைமை யில் நடைபெற்றது.

ஒன்றிய தி.க. தலைவர் ச.கண்ணன், ஒன்றிய தி.க. செயலாளர் வழக்குரை ஞர் துரை.ஸ்டாலின், பெரியார் பெருந்தொண் டர் கோ.தங்கவேல், துரை.இராமலிங்கம்,   ந.சின்னையன் காங்கிரஸ் கட்சி ஆகியோர் முன் னிலை வகித்து உரையாற் றினார்கள்.

இளைஞரணி அமைப்பாளர் செந்தலை க.கலையரசன் வரவேற் புரையாற்றினார்.

கூட்டத்தின் தொடக் கத்தில் மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு கொள்கைப் பாடல்கள் பாடினார்.

தொடர்ந்து, பூதலூர் ஒன்றிய தி.க. தலைவர் அள்ளூர் இரா.பாலு, பூத லூர் ஒன்றிய தி.க.செயல £ளர் முல்லைக்கொடி ரெ.புகழேந்தி, தகவல் அறியும் உரிமை சட்ட மாவட்ட தலைவர் அமர் சிங், தி.மு.க. தண்டாயுத பாணி, மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல் ஆகியோர் உரைக்குப் பின், கூட்டத் தின் நோக்கத்தை விளக்கி மாவட்ட தி.க. தலைவர் வழக்குரைஞர் சி.அமர் சிங்  துவக்கவுரையாற்றி னார்.

இறுதியாக,  தலை மைக் கழகப் பேச்சாளர் நகைச்சுவையரசு இராம. அன்பழகன் வைக்கம் போராட்ட வரலாறு, திராவிட மாடல் ஆட்சி யின் சாதனைகளை விளக் கியும்,

திராவிடர் கழகத்தின் கொள்கைகளை நகைச் சுவை கலந்த பாடல்கள்க ளுடன் எடுத்துக் கூறி  விளக்கமாக உரையாற்றி னார்.

நிகழ்வில், அந்த கிரா மத்தில் முதல் மருத்துவ மாணவராக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் 

அ.வர்சா அவர்க ளுக்கு, மாவட்ட தலைவர் சி.அமர்சிங் மாணவியைப் பாராட்டி பயனாடை அணிவித்தார். திருவை யாறு பேரூர் திராவிடர் கழகத் தலைவராக புதி தாக பொறுப்பேற்றுள்ள ஆ.கவுதமன் அவர்களுக்கு மாவட்ட தலைவர் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்.

இறுதியில் மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் இர.மணிகண்டன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் தஞ்சை மாநகர இளைஞரணி து.தலைவர் அ.பெரியார் செல்வன், உள்ளிட்ட தோழர்கள் மற்றும்  பொது மக்கள் கலந்து கொண்டு  கூட்டத்தைக் கேட்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment