நாகர்கோயில், ஜூன் 10- மக்களிடம் உள்ள மூடநம்பிக்கைகளை ஒழித்து அவர்களுக்கு பகுத்தறிவு விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட திரா விடர் கழகம் சார்பாக மூடநம் பிக்கை ஒழிப்பு பகுத்தறிவு விழிப் புணர்வு பரப்புரை செய்யப்பட்டது.
பகுத்தறிவு விழிப்புணர்வுக்கான துண்டறிக்கைகளை பொதுமக் களிடம் வழங்கி பரப்புரை செய் தனர். குமரிமாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள். ஒழுகினசேரி மற்றும் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு திக குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் பரப்புரையை தொடங்கிவைத்தார். திராவிடர் கழக பொதுக்குழு உறுப் பினர் ம.தயாளன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ. சிவ தாணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திக மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் பா.பொன்னுராசன், பகுத்தறிவாளர்கழக செயலாளர் எம். பெரியார் தாஸ், திராவிடர் கழக தொழிலாளரணி அமைப்பா ளர் ச.ச. கருணாநிதி,
தோழர்கள் பா.சு. முத்து வைரவன், ம.செல்வராசு, ச.ச.மணி மேகலை, பொன்.எழில் அரசன் உட்பட பலரும் கலந்து கொண்ட னர். தந்தை பெரியாருடைய கருத் துக்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கருத் துக்கள் அடங்கிய துண்டறிக்கை களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி படித்தனர்.
No comments:
Post a Comment