வல்லம் சிறப்பு நிலைப் பேரூராட்சியும் இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
தஞ்சை, ஜூன் 6- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மய்யம் மற்றும் வல்லம் தேர்வு நிலைப் பேரூராட்சி இணைந்து 05.06.2023 அன்று வல்லம் சிறப்பு நிலை பேரூராட்சி நிலையத்திலி ருந்து உலகச் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணியை பல் கலைக்கழக பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா மற்றும் வல்லம் தேர்வு நிலை பேரூராட்சியின் தலைவர் செல்வராணி கல்யாண சுந்தரம் ஆகியோர் பச்சைக்கொடி அசைத்து விழிப்புணர்வு பேர ணியை தொடங்கிவைத்தனர்.
நெகிழி மாசுபாட்டை முறியடி என்ற கருப்பொருளின் கீழ் இந்த பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சி யில் பங்குபெற்ற பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் தேர்வு நிலைப் பேரூராட்சியின் செயல் அலுவலர் ஆர்.ராஜா மற் றும் மகாலட்சுமி வெங்கடேசன் மற்றும் பேரூராட்சியின் உறுப்பி னர்கள் கலந்துகொண்டு நெகிழிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி னர்.
இறுதியில் வல்லம் சிறப்பு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் வல்லத்தில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் உரம் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றிய கண்ணோட்டத்துடன் பேரணி முடிந்தது. ஒடிசா ரயில் விபத்தில் உயிர்ழந்த மக்களுக்கு பல்கலைக்கழகத்தின் சார்பிலும், வல்லம் பொதுமக்களின் சார்பிலும் சில மணித்துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment