கன்னியாகுமரி மாவட்டத்தில் கழக குடும்பத்தினர் சந்திப்பு, உறுப்பினர் சேர்க்கை, புத்தகங்கள் பரப்புதல் பணி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 3, 2023

கன்னியாகுமரி மாவட்டத்தில் கழக குடும்பத்தினர் சந்திப்பு, உறுப்பினர் சேர்க்கை, புத்தகங்கள் பரப்புதல் பணி!

ஆரல்வாய்மொழி, ஜூன் 3- கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் தலைவர் அவர்களின் விழைவின்படி கழக குடும்பத்தினர்களை, பெரியார் பற்றாளர்களை நேரில் சந்திக்கும் பயணம் 28. 5.2023 அன்று காலை 9 மணிக்கு ஆரல்வாய்மொழியில் தொடங்கி இரவு 9 மணிக்கு கன்னியாகுமரியில் நிறைவு பெற்றது 

மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன், மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகி யோர் காலை 9 மணிக்கு  தோவாளை ஒன் றியம்  ஆரல்வாய்மொழி வந்தடைந்தனர்.

பொதுக்குழு உறுப்பினர்மா.மணி, மாவட்ட மகளிர் அணித் தலைவர் சு.இந்திரா, மகள் பொறியாளர் மா.இ. தமிழ் இலக்கியா, மகன் மா.இ.தமிழ்மதி ஆகியோர் அன்புடன் வரவேற்று காலை சிற்றுண்டி வழங்கி மகிழ் ந்தனர். தமிழர் தலைவர் அவர்கள் கட்ட ளைப்படி ஆரல்வாய் மொழியில் பங்கேற் கும் கூட்டம் நடத்துவது பற்றி உரையாடினர். பெரியாரை எப்படி புரிந்து கொள்வது? ஆசிரியர் கி. வீரமணி 90 நூல்களை பெற்றுக் கொண்டனர்.

நாகர்கோவில் வடசேரியில் மாவட்ட துணைத் தலைவர் ச. நல்லபெருமாள், இணையர் சாந்தி ஆகியோர் வரவேற்று போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பங் கேற்ற பழைய நிழற்படங்களை காட்டி தமிழர் தலைவரின் அரும்பணியை பாராட்டி வடசேரியில் தனிக் கிளைக் கழகம் உரு வாக்குவதென தெரிவித்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார்.

பேராசிரியர் அ.சிதம்பரதானு அன்புடன் வரவேற்று ‘விடுதலை'யின் சிறப்புகளை எடுத்துக் கூறி புத்தகங்களை பெற்றுக் கொண்டார். 

கட்டையன் விளையில்   பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், இணையர் சிறி வள்ளியோடு மும்பை தாராவியில் தனது தந்தையாரது கழகப் பணியையும், பெரியார் சதுக்கம் அமைந்த வரலாறையும் மகிழ்ச் சிபொங்க தெரிவித்தனர். 

கடுக்கரை

கடுக்கரையில் இளைஞரணி பொறுப் பாளர் ந. தமிழரசன் புத்தகங்களைப் பெற்று மகிழ்ந்தார்.

திருவட்டார் ஒன்றியம்  மணக்காவிளை யில் இளைஞரணி தோழர் டார்ஜன் தன் குடும்பத்துடன் வரவேற்று மகிழ்ந்தார்.

தோவாளை  ஒன்றியம்  திட்டுவிளையில் மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ் இல் லத்தில் நடைபெற்ற சந்திப்பில் திட்டுவிளை, பூதப்பாண்டி ஆகிய ஊர்களில் கழகக் கூட் டம் நடத்த திட்டமிடப்பட்டது. 

மார்த்தாண்டம் நகரில்  ப.க.பொறுப்பாளர் எஸ்.செய்ன், மார்த்தாண்டம் ராஜசிற்பி, சீனி வாசன் ஆகியோர் வரவேற்று மார்த்தாண் டத்தில் வைக்கம் போராட்ட  நூற்றாண்டு விழா கூட்டங்கள் நடத்துவோம் எனத் தெரி வித்து   உறுப்பினராக பதிவு செய்து கொண் டார்கள். குழித்துறையில் தோழர்  ரெ.செய்சங்கர் தம்மை உறுப்பினராக பதிவு செய்து மகிழ்ந்தார்.

தக்கலை ஒன்றியம் பள்ளியாடியில் ஒன் றிய செயலாளர் சி.இளங்கோ வரவேற்று பள்ளியாடி, தக்கலையில் பொதுக்கூட்டம் நடத்த உறுதி செய்தார். கிள்ளியூர் ஒன்றியம்  கருங்கலில் பெரியார் பெருந்தொண்டர் தெ. சாம்ராஜ் புத்தகங்கள் பெற்றுக் கொண்டார். திக்கனங்  கோட்டில் ஒன்றிய தலைவர் இராஜிவ்லால் வரவேற்று புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார். 

கிள்ளியூர்

கிள்ளியூர் ஒன்றியம் மிடாலத்தில்  பெரியார் பெருந்தொண்டர் சிகிருஷ்னே சுவரி, மகள் அன்பரசி, பேரப்பிள்ளைகள் ஆகியோருடன் வரவேற்று மிடாலத்தில் வைக்கம் போராட்டநூற்றாண்டு விழா நடத்துவோம் எனக் கூறி புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார்.

இரணியலில் மாவட்ட ப.க. தலைவர் உ.சிவதானு, இணையர் இராமலெட்சுமி, ஆகியோர் வரவேற்று திங்கள் சந்தை, இர ணியலில் கூட்டம் நடத்துவது எனக்கூறி புத்தகங்களை பெற்றுக்கொண்டார்.

பெருஞ்செல்விளையில் பெரியார் பெருந்தொண்டர் ஏ. ராமன் புத்தகங்களை பெற்று மகிழ்ந்தார். 

ஆசாரிப் பள்ளத்தில் மாவட்ட இளை ஞரணி தலைவர் இரா. ராஜேஸ் புத்தகங்கள் பெற்றுக்கொண்டார்.

நாகர்கோவில் மாநகர் கோட்டாரில் மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் ச.ச. கருணாநிதி, ச.ச.மணிமேகலை ஆகி யோர் கழக உறுப்பினராக பதிவு செய்து கொண்டார்கள்.

இராசாக்கமங்கலம்

இராசாக்கமங்கலம் ஒன்றியம் பறக்கை யில்  ஆசிரியர் லிங்கேசன் இணையர்சுலேகா லிங்கேசன்ஆகியோர் வரவேற்று புத்தகங் கள் பெற்றுக் கொண்டார்கள்.

நிறைவாக இரவு ஒன்பது மணிக்கு கன் னியாகுமரியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத் தலைவர் எஸ்.குமாரதாஸ், மாவட்ட மகளி ரணி தலைவர் மஞ்சு குமாரதாஸ்,மாவட்ட அமைப்பு சாராதொழிலாளரணி அமைப் பாளர் யுவான்ஸ், ஆகியோர் வரவேற்று ஜூன் முதல் தேதி நடைபெற உள்ள வைக் கம் நூற்றாண்டு விழா, புத்தகங்கள் அறிமுக விழாவைமிகச்சிறப்பாக நடத்துவோம் என்று தெரிவித்து மகிழ்ந்தனர். 

அனைத்து சிற்றூர், பேரூர்களில் உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ், பரவிக் கிடப்பது மாவட்டத்தின் தனிச்சிறப்பாகும்

No comments:

Post a Comment